வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிகள் விடுவிப்பு: பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர நேரில் களப்பரிசோதனை
வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலையத்திலுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர குறித்த பிரதேசங்களை இன்று பார்வையிட்டார்.
இதன்பின்னர் பலாலி இராணுவ உயர் பாதுகாப்பு வலையத்திலுள்ள இராணுவ ஆதார வைத்தியசாலை வளாகத்தில் இதற்கான கூட்டம் ஒன்று இன்று காலை இடம் பெற்றது.
அத்துடன் இராணுவ முகாம்கள் அமைந்துள்ள மக்களின் காணிகளுக்கு சென்று அங்குள்ள நிலைமைகள் தொடர்பாகவும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் ஆராய்ந்தானர்.
மேலும் இராணுவத்தின் படைத் தளங்கள் அமைந்துள்ள பலாலி உயர் பாதுகாப்பு வலையத்தின் ஒவ்வொரு இடங்களையும் அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன் போது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் நாடாளுமன்ற உறுப்பினர்
க.இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பலாலி இராணுவ கட்டளை தளபதி இலங்கை இராணுவ தளபதி பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

