எடப்பாடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பழனிசாமி
அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சேலம் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட தனது வேட்பு மனுவை இன்று (ஏப் 06) தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கலின் முதல் நாளான (மார்ச் 30) அன்றே கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் மனுத் தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைவதால், பல்வேறு கட்சியினரும் மனு தாக்கலில் மும்முரம் காட்டி வருகின்றனர். சென்னை மயிலாப்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தர்ராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
மதுரை மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜு அச்சம்பத்தில் உள்ள மேற்கு தாலுகா அலுவலகத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
தருமபுரியில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி ஆயிரக் கணக்கானோருடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
