9வது ஆண்டு நினைவு தினம் – அமரர். நாகலிங்கம் தவமணிநாயகம் (04/02/2026)
மேடை நாடக ஒளி, ஒலி அமைப்பாளரும் முன்னாள் இலங்கை காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்தின் மின்சாரப்பகுதி முகாமையாளரும், தெல்லிப்பளை துர்க்காதேவி ஆலயத்தின் தேவஸ்தான முன்னாள் நிர்வாக சபை மூத்த உறுப்பினரும், மல்லாகம் கோணப்புல ஞான வைரவர் ஆலய தலைவரும், தாயகத்தில் மல்லாகத்தை பிறப்பிடமாக கொண்ட அமரர் நாகலிங்கம் தவமணிநாயகம் அவர்களின் 9ம் ஆண்டு நினைவு தினம் 04ம் திகதி பெப்ரவரி மாதம் புதன் கிழமை இன்று அனுசரித்து நினைவு கூருகின்றார்கள்.
இன்று அமரர் நாகலிங்கம் தவமணிநாயகம் அவர்களை, அன்பு பிள்ளைகள் கருணாகரன் (நோர்வே) தயானந்தன் (தாயகம்-மல்லாகம்) ரவீந்திரன் (பிரான்ஸ்) யமுனா (மல்லாகம்) மருமக்கள் சாரதாவல்லி (நோர்வே) றோகிணி (மல்லாகம்) கேதீஸ்வரி (பிரான்ஸ்) சண்முகராஜா (மல்லாகம்) பேரப்பிள்ளைகள் கோபிசாந், மோகவி, ரவிசாந், சங்கவி, ஜாதவி, சாம்பவி, சம்புஜன் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் இணைந்து நினைவு கூருகின்றார்கள்.
இன்று 9வது ஆண்டு நினைவு நாளில் நினைவு கூரப்படும் அமரர். நாகலிங்கம் தவமணிநாயகம் அவர்களை TRT தமிழ் ஒலி குடும்பமும் இணைந்து நினைவு கூருகின்றோம்.
இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பிள்ளைகள் கருணாகரன், தயானந்தன், ரவீந்திரன், யமுனா.
அவர்கள் அனைவருக்கும் எமது நன்றி.
