Main Menu

தமிழர்களிடம் சஜித் மன்னிப்புக் கோர வேண்டும் – ஸ்ரீதரன் வலியுறுத்தல்

திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவத்தில், சஜித் பிரேமதாச கூறிய கருத்தை அவர் மீளப் பெற வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், அவர் தமிழ் மக்களிடமும் மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பாதீடு மீதான குழுநிலை விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, திருகோணமலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை அதே இடத்தில் இருக்கும் வரையில், குறித்த பிரச்சினை தீராது என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.
பகிரவும்...