பிரான்ஸ் – டிஜிட்டல் Carte Vitale பயன்பாடு
நவம்பர் 18 முதல் டிஜிட்டல் Carte Vitale பயன்பாட்டை தற்போது பிரான்ஸ் முழுவதும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். முன்பு France Identité செயலி மற்றும் புதிய அடையாள அட்டை இருந்தால்தான் நிறுவ முடிந்தது; தற்போது Carte Vitale செயலியை பயன்படுத்தி செயல்படுத்தலாம்.
Carte Vitale செயலியை பதிவிறக்கம் செய்த பிறகு, சமூக பாதுகாப்பு எண்ணை உள்ளிடவும் (numéro de Sécurité sociale), அல்லது உங்கள் Carte Vitale ஐ ஸ்கேன் செய்ய வேண்டும். பின்னர் முக அடையாள சரிபார்ப்பைச் செய்ய வேண்டும்; இது நீங்கள் தான் என்பதை உறுதிப்படுத்த அத்தியாவசியமான பகுதியாகும்.
France Identité வழி மூலமும் Carte Vitale ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
Carte Vitale செயலியை நிறுவிய பிறகு, மருத்துவர் அல்லது மருந்தகங்களில் QR குறியீடு அல்லது Android மொபைல்களில் NFC மூலம் பயன்படுத்தலாம். பெரும்பாலான தொலைபேசிகள் QR முறைக்கு இணக்கமானவை.
பிரான்ஸில் உள்ள அனைத்து மருத்துவர்களும் இந்த டிஜிட்டல் முறையை ஏற்கும் கருவிகளை இன்னும் வைத்திருக்கவில்லை.
தற்போதைய நிலவரப்படி, 65% மருந்தகங்களும், வெறும் 24% பொது மருத்துவர்கள் (General Practitioners) மட்டுமே இந்த டிஜிட்டல் அட்டையை ஸ்கேன் செய்யும் வசதியைக் கொண்டுள்ளனர்.
ஆனால் ஒரு முக்கிய எச்சரிக்கை: பழைய அட்டையைத் எறிந்து விடவேண்டாம். அனைத்து இடங்களிலும் இந்த வசதி வரும் வரை, உங்கள் பிளாஸ்டிக் அட்டையையும் கையோடு வைத்திருப்பது அவசியம்
இது தொழில்நுட்பத்தை விரும்புபவர்களுக்கான ஒரு கூடுதல் வசதி மட்டுமே. முதியவர்கள் அல்லது ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர்கள் வழக்கம்போல் பழைய பிளாஸ்டிக் அட்டையையே தொடர்ந்து பயன்படுத்தலாம்.

