Main Menu

யாழில் 29 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வார காலப்பகுதியில் 29 பேர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, 45 போத்தல் கசிப்பு, கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் , 90 லீட்டர் கோடா , சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் என்பவற்றை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டுக்களின் கீழ் 29 பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர்

கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் , பொலிஸாரின் விசேட நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.