வரிச் சலுகைகளை இன்னும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – சஜித்
வெள்ளை மாளிகையுடன் நேரடியான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு, அமெரிக்கா விதித்துள்ள வரிச் சலுகைகளை இன்னும் குறைந்த மட்டத்தில் பெறுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்க்கட்சித்லைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, இலங்கைக்கான தீர்வை வரியை 44 சதவீதத்தில் இருந்து 30சதவீதமாகக் ஆகக் குறைத்தமை சிறந்ததொரு விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர், இலங்கையின் ஏற்றுமதிகளில் 26.4 சதவீத பங்களிப்பைப் பெற்றுத் தரும் நாடாக அமெரிக்கா திகழ்ந்து வருவதாக குறிப்பிட்டார்.
ஆடைத்துறையில் 60 சதவீத ஏற்றுமதி நாடாகவும் அமெரிக்கா இருந்து வருகிறது.
எனினும், ஏற்றுமதி போட்டியாளர்களாக இருந்து வரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கை பெற்ற வரிச் சலுகை நியாயமானதா? என்பது தொடர்பில் ஆராய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
