கனடாவில் 4.1 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு
கனடாவின் வான்கூவர் தீவுக்கும், வாஷிங்டன் மாநிலத்திற்கும் இடையில் 4.1 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று அதிகாலை 5:02 அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.
விக்டோரியா மற்றும் வாங்கூவர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்த நில அதிர்வை உணர்ந்துள்ளனர்.
மேலும், இந்த நில அதிர்வின் காரணமாக இதுவரை எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை எனவும், ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
