Main Menu

ஜனாதிபதி நிதியத்தில் பணம் பெற்றுக் கொண்ட அமைச்சர்கள், எம்.பிகளின் பெயர் பட்டியல் வெளியானது

2005 – 2024ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றுக்கொண்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் இன்று (17) பகிரங்கப்படுத்தினார்.
முன்னாள் பிரதமர் தி.மு ஜயரத்னவுக்கு அதிகூடிய தொகை வழங்கப்பட்டதாகவும் அவருக்கு 3 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இவ்வாறு பணம் பெற்றுக் கொண்டவர்களின் பெயர்கள்…
எஸ்.ஏ ஜகத் குமார – 10 இலட்சம் ரூபாய்
கே.பி.எஸ் குமாரசிறி- 953,430 ரூபாய்
ஜயலத் ஜயவர்தன – 10 இலட்சம் ரூபாய்
நாமல் குணவர்தன – 10 இலட்சம் ரூபாய்
தர்மதாச பண்டா – 10 இலட்சம் ரூபாய்
விதுர விக்கிரமநாயக்க – 15 இலட்சம் ரூபாய்
விமலவீர திசாநாயக்க – 30 இலட்சம் ரூபாய்
லகீ ஜயவர்தன – 16.2 இலட்சம் ரூபாய்
பீ.சந்திரசேகரன் – 14 இலட்சம் ரூபாய்
ஜோன் அமரதுங்க – 40 இலட்சம் ரூபாய்
ஜோசப் மைக்கல் – 27 இலட்சம் ரூபாய்
டீ.பி ஏக்கநாயக்க – 48 இலட்சம் ரூபாய்
டபிள்யூ.எம்.எப் பொன்சேக்கா – 55 இலட்சம் ரூபாய்
சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க – 90 இலட்சம் ரூபாய்
எலிக் அளுவிஹாரே – 22 இலட்சம் ரூபாய்
ரஞ்சித் அளுவிஹாரே – 8.6 இலட்சம் ரூபாய்
ராஜித சேனாரத்ன – 100 இலட்சம் ரூபாய்
கெஹெலிய ரம்புக்வெல்ல – 110 இலட்சம் ரூபாய்
எம்.கே.ஏ.டி.எஸ் குணவர்தன – 112 இலட்சம் ரூபாய்
ரஞ்சித் சொய்ஸா – 188 இலட்சம் ரூபாய் மற்றும் தி.மு ஜயரத்ன – 300 இலட்சம் ரூபாவை ஜனாதிபதி நிதியத்திலிருந்து பெற்றுக்கொண்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பகிரவும்...