ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டமைக்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் உலக தலைவர்கள்
ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வார் (Yahya Chinwar) கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து பல உலக நாடுகளின் தலைவர்கள் தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர்.
அந்தவகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு தொலைபேசி ஊடாக வாழ்த்து தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
யாஹ்யா சின்வாரின் மரணமானது, இஸ்ரேலியர்களுக்கு நிம்மதியான தருணத்தைக் குறிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் தமது இலக்குகளை அடைவதற்கு யாஹ்யா சின்வார் பாரிய தடையாகக் காணப்பட்டதாகவும், அந்தத் தடை தற்போது நீங்கியுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
பகிரவும்...
