Main Menu

ஒமிக்ரோன் வைரஸை சாதாரணமானது என வகைப்படுத்தப் படக்கூடாது: உலக சுகாதார அமைப்பு!

கொரோனா வைரஸின் புதியவகை மாறுபாடான ஒமிக்ரோன் வைரஸை சாதாரணமானது என்று வகைப்படுத்தப்படக்கூடாது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த உலக சுகாதார சபையின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேஸ்,

‘டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஓமிக்ரோன் குறைவான தீவிரத்தன்மை கொண்டதாகத் தோன்றினாலும், குறிப்பாக தடுப்பூசி போடப்பட்டவர்களில், இது லேசானது என்று வகைப்படுத்தப்பட வேண்டும் என்று அர்த்தமல்ல.

இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. முந்தைய மாறுபாடுகளைப் போலவே, ஒமிக்ரோன் மக்களை மருத்துவமனையில் சேர்க்கிறது மற்றும் மக்களைக் கொல்கிறது’ என கூறினார்.

டெல்டா வைரசுடன் ஒப்பிடும்போது நவம்பரில் தென்னாபிரிக்கா மற்றும் ஹொங்கொங்கில் முதன்முதலில் கண்டறியப்பட்ட மாறுபாட்டிலிருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான ஆபத்து குறைந்துள்ளதாக ஆரம்பகால ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன என்று ஊடக சந்திப்பில் உலக சுகாதார அமைப்பின் மருத்துவ மேலாண்மைக்கான தலைவர் ஜேனட் டயஸ் கூறினார்.

மேலும், இளைஞர்கள் மற்றும் வயதானவர்கள் இருவரிடமும் தீவிரத்தன்மை குறைவதற்கான அபாயமும் இருப்பதாகத் தோன்றுகிறது என்றும் அவர் கூறினார்.

பகிரவும்...