Main Menu

ஏழு பேர் விடுதலை குறித்து ஆளுநருக்கு அழுத்தம் கொடுப்போம்- சட்டத்துறை அமைச்சர்

ஏழு பேர் விடுதலை குறித்து ஆளுநருக்கு அழுத்தம் கொடுப்போம் என சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.

சேலம் மத்திய சிறையில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று (திங்கட்கிழமை) ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மேலும் கூறியுள்ளதாவது, “முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான ஏழு பேரின் விடுதலை வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

மேலும் விடுதலை செய்வது குறித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்ப தேவையில்லை. ஆளுநரே முடிவு எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எனவே இந்த வழக்கு, விசாரணைக்கு வரும்போது உச்ச நீதிமன்றம் நல்ல முடிவை எடுக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம்.

இதனால் ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு அழுத்தம் கொடுப்போம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...