Main Menu

இராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் பெண் முகவர்களுடன் பகிர்ந்த குற்றத்திற்காக இந்திய வீரர் கைது!

இராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் பெண் முகவர்களுடன் பகிர்ந்த குற்றத்திற்காக இந்திய வீரரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம்- சிகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆகாஷ் மஹாரியா என்ற 22 வயதான இளைஞர், இந்திய இராணுவத்தில் இராணுவ வீரராக சிக்கிம் பகுதியில் பணி புரிந்து வருகின்றார்.

இந்நிலையில் இராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் பெண் முகவர்களுடன் பகிர்ந்த குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதாவது, பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த உளவு துறையினருடன் அவருக்கு சமூக வலைத்தளம் ஊடாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. போலியான பெயரில் அந்த நாட்டில் பெண் உளவு துறை அதிகாரிகள் அவருடன் நட்பாக பழகியுள்ளார் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து ஆகாஷ் யாரிடமும் பகிர கூடாத இராணுவ ரகசியங்களை சமூக வலைத்தள சேட் மூலம் பகிர்ந்துள்ளார். இந்த விவரம் ராஜஸ்தான் பகுதியில் இருக்கும் உளவு துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்த காரணத்தினால் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என அதிகாரிகள்  சுட்டிக்காட்டியுள்ளனர்.

பகிரவும்...