Main Menu

தி.மு.க. தேர்தல் அறிக்கை பெரிய விடயமல்ல – முதலமைச்சர் பழனிசாமி

தி.மு.க., தேர்தல் அறிக்கை பெரிய விடயமல்ல என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) காலை வெளியிட்டார்.

இந்த நிலையில், தி.மு.க. தேர்தல் அறிக்கை குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த  எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னரே, நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டு செயல்படுத்தியுள்ளோம். அது மக்களுக்கு தெரியும். இதனால், திமுக தேர்தல் அறிக்கை பெரிய விடயமல்ல.

பெரும்பான்மை பலத்துடன் நாங்கள்தான் வெற்றி பெறுவோம். கடந்த இடைத்தேர்தல்களில் பத்தரிகைகள் கணிப்புகள் பொய்த்தன. இதனால் வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளது. தே.மு.தி.க. சென்றதால் பாதிப்பு இல்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.