Main Menu

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பதை அரசாங்கம் நிரூபிக்கும் – சரத் வீரசேகர

இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என்பதை மார்ச் மாத மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை நிரூபிக்கும் என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் கருத்து தெரிவித்த அவர் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன், மீண்டும் புலனாய்வுப் பிரிவை பலப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் 8 தீர்மானங்களை, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கொண்டுவந்திருந்தார்.

அவ்வாறே 30 இன் கீழ் ஒன்று தீர்மானத்துக்கும் கடந்த நல்லாட்சி அரசாங்கம் இணை அனுசரனை வழங்கியது சரத் வீரசேகர தெரிவித்தார்.

இவ்வாறு இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவைப் பலவீனப்படுத்தும் செயற்பாடுகளையே கடந்த அரசாங்கம் மேற்கொண்டது என கூறினார்.

இந்த நிலையில் இவை அனைத்தும் ஆதாரமற்றக் குற்றச்சாட்டு என்பதை நாம் இம்முறை ஜெனிவா அமர்வில் நிருபிப்போம் என்றும் அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.