Main Menu

சோதனை பற்றாக்குறை காரணமாக தேசிய சுகாதார சேவை ஊழியர்கள் பணியில் இருந்து விலகல்!

தேசிய சுகாதார சேவை ஊழியர்களுக்கான கொரோனா வைரஸ் சோதனைகள் இல்லாததால், ஊழியர்கள் பணியில் இருந்து விலகியுள்ளனர்.

இதனால் ஏற்படும் பற்றாக்குறை காரணமாக சேவைகள் ஆபத்தில் உள்ளன என மருத்துவமனை தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

தேசிய சுகாதார சேவை அறக்கட்டளை தலைவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய சுகாதார சேவை வழங்குநர்கள், பிரிஸ்டல், லீட்ஸ் மற்றும் லண்டனில் உள்ள மருத்துவமனைகள் தேசிய சுகாதார சேவை ஊழியர்களுக்கு சோதனைகள் கிடைக்காதது குறித்து வார இறுதியில் கவலைகளை எழுப்பியுள்ளன என கூறினர்.

கொவிட்-19 மற்றும் பருவகால காய்ச்சலின் குளிர்கால அழுத்தங்களுக்கான ஏற்பாடுகள் தடைபட்டு வரும் நிலையில், சாதாரண தேசிய சுகாதார சேவைகளை மீட்டெடுப்பது ஆபத்தில் உள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தங்களுக்கு அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு பரிசோதனையைப் பெற இயலாமை காரணமாக தேசிய சுகாதார சேவை ஊழியர்கள் சுயதனிமைப்படுத்தப்பட வேண்டியிருக்கிறது.

பகிரவும்...