Main Menu

ரஷ்யாவில் உள்ளூராட்சித் தேர்தல் – மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

ஆளும் கிரெம்ளின் சார்பு ஐக்கிய ரஷ்யா கட்சிக்கு ஒரு பெரிய சோதனையாகக் கருதப்படும் உள்ளூராட்சித் தேர்தலில் ரஷ்யா முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர்.

உள்ளூராட்சி மன்றங்களில் கிட்டத்தட்ட 160,000 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்த தேர்தலில் பிராந்தியங்களின் ஆளுநர்களும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு விஷம் வைத்ததாக சந்தேகிக்கப்பட்ட சில வாரங்களிலேயே இந்த தேர்தல் இடம்பெறுகின்றது.

ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உத்தரவின் பேரில் விஷம் வைக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகின்ற போதும் கிரெம்ளின் இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்தூள்ளது.

ஓகஸ்ட் 20 அன்று ரஷ்யாவில் நோய்வாய்ப்பட்ட நவால்னி, தற்போது ஜேர்மனியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த வாரம், அவர் கோமாவிலிருந்து மீண்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை மேம்பட்டுள்ளதாகவும் பேர்லினின் சாரிடா மருத்துவமனையின் மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

இந்நிலையில் ஐக்கிய ரஷ்யா கட்சியை தோற்கடிக்க சிறந்த வேட்பாளர்களுக்கு ஆதரவை வழங்குவதற்காக தந்திரோபாயமாக வாக்களிக்குமாறு ரஷ்யர்களை அலெக்ஸி நவல்னியின் கட்சி வலியுறுத்தி வருகிறனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ரஷ்யாவின் தேர்தல் ஆணைக்குழு செப்டம்பர் 11 முதல் 12 அன்று முன்கூட்டியே வாக்களிக்க அனுமதித்தது.

56,000 க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் தயார் செய்யப்பட்டுள்ள இந்த தேர்தலில் இன்று ஞாயிற்றுக்கிழமை வாக்காளர்களுக்கு முக்கிய நாள் என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பகிரவும்...