Main Menu

வயதானவர்கள் தீவிரமாக நோய்வாய்ப் படும் அபாயத்தில் உள்ளனர்: பொது சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

முதியோர்களிடையே தொற்றுநோய்க்கான கவலையான அறிகுறிகள் இருப்பதாக, பொது சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஏனெனில், பிரித்தானியாவில் தொற்றுநோய் மீண்டும் வேகமாக பரவிவருகின்றது.

தொற்று நோயை அளவிடும் ஆர் எண், மார்ச் மாதத்திற்கு பிறகு முதல் முதல் முறையாக 1 முதல் 1.2 வரை உயர்ந்துள்ளது.
ஒன்றுக்கு மேலே உள்ள எந்த எண்ணும் தொற்றுநோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் குறிக்கிறது.

பிரித்தானியாவில் வெள்ளிக்கிழமை புதிதாக 3,539பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் 600க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான மக்களிடையே நடத்திய ஆய்வில், ஒவ்வொரு ஏழு முதல் எட்டு நாட்களுக்கு ஒருமுறை தொற்றுகள் இரட்டிப்பாகின்றன. இது வடக்கிலும் இளைஞர்களிடமும் தொற்றுநோய்களின் குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டறிந்தது.

இதுகுறித்து பொது சுகாதார மருத்துவ இயக்குனர் யுவோன் டாய்ல் கூறுகையில், ‘இளையவர்கள் புதிய தொற்றுகளில் மிகப் பெரிய பங்கைக் கொண்டிருந்தாலும், வயதானவர்களுக்கு ஏற்படும் தொற்றுநோய்களின் கவலையான அறிகுறிகளை இப்போது காணத் தொடங்குகிறோம், அவர்கள் தீவிரமாக நோய்வாய்ப்படும் அபாயத்தில் உள்ளனர்’ என கூறினார்.

இருப்பினும், தொற்றுகள் அதிகரித்து வருகின்ற போதிலும், மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை பெரும்பாலும் 863ஆக உள்ளது.

பகிரவும்...