கொரோனா : ஒரே நாளில் பத்தாயிரத்தை நெருங்கிய தொற்று!
ஒரே நாளில் கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட பத்தாயிரம் பேருக்கு தொற்றியுள்ளது. பிரான்சின் பொது சுகாதார நிறுவனம் (générale de la Santé) வெளியிட்டுள்ள தகவல்களின் படி, கடந்த 24 மணிநேரத்தில் 9843 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது எனவும், ஒரே நாளில் 71 புதிய தொற்று வலையங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதேவேளை, தொற்று வீதம் 5.4% ஆக அதிகரித்துள்ளது. 5096 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 615 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிசை பெற்று வருகின்றனர். தவிர, கடந்த 24 மணிநேரத்தில் 19 பேர் சாவடைந்துள்ளனர்.
பகிரவும்...