Main Menu

பிரான்ஸில் மீண்டும் வேகமாக பரவும் கொவிட்-19 தொற்று?ஒரேநாளில் 1,392பேர் பாதிப்பு

பிரான்ஸில் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் அங்கு ஆயிரத்து 392பேர் பாதிக்கப்பட்டதோடு, 15பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 26ஆம் திகதிக்கு பிறகு (1,588பேர்) தற்போது மீண்டும் கொவிட்-19 பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது.

இதேவேளை, பிரான்ஸில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக ஒரு இலட்சத்து 85ஆயிரத்து 196பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30ஆயிரத்து 238பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 73ஆயிரத்து 647பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 385பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 81ஆயிரத்து 311பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த ஜூன் மாத ஆரம்பத்திலிருந்து பிரான்ஸில் முடக்கநிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. தற்போது பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு விட்டன.

எனினும், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு அதிகமானவர்கள் ஒன்று கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...