Main Menu

இரண்டாவது தொற்று அலை தவிர்க்க முடியாததாக அமையப் போகின்றது – முலூஸ் மருத்துவக் குழுவினர்

உள்ளிருப்பு நீக்கத்தைத் தொடர்ந்த, பரிசில் பொறுப்பில்லாமல், வெள்ளைத் தேவாலய முன்றறிலும், ஆற்றங்கரைகளிலும் கூடும் மக்களையும் திறந்துள்ள பெரும் காட்டுப் பூங்காப் பகுதிகளிலும், கூடும் பரிஸ் மக்களைப் பார்த்து, கொரோனா வைரசுடன் கடுமையாகப் போராடி களைத்துப் போய் இருக்கும் முலூஸ் மருத்துவ அணியினர் பெரும் கவலை கொண்டுள்ளனர்.


«பரிசில் பொதுப் போக்குவரத்துக்களிலும், வீதிகளிலும், வர்த்தக நிலையங்களிலும், மக்கள் சமூக இடைவெளிகளைக் கடைப்பிடிக்காமல், எந்தத் தடைகளையும் மதிக்காமல் இருக்கும் மக்களின் மனநிலை பெரும் அச்சத்தைத் தருகின்றது. இது பெருமளாவன தொற்றினைப் பரப்ப உள்ளது. தொற்றுநோயாளிகள் மிக விரைவாக அதிகமாக உள்ளனர். மருத்துவர்களும், மருத்தவத்தாதிகளும் பெரும் களைப்பில் உள்ளனர். இது பேரழிவை உருவாக்கும். இரண்டாவது தொற்று அலை தவிர்க்க முடியாததாக அமையப் போகின்றது» என பேரழிவை முதற்சுற்றிலேயே கண்ட, GRAND EST பகுதியின் முலூஸ் வைத்தியசாலையின் தீவிரசகிச்சைப்பிரிவின் தலைமை மருத்துவர் Dr Philippe Guiot தெரிவித்துள்ளார்.

முலூசின் கொரோனா வைரஸ் தாக்கத்தினைச் சமாளிக்க முடியாமல், இராணுவத்தினர் முகாம் வைத்தியசாலையை உருவாக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதையெல்லாம் கடந்த அவர்கள், இன்று பரிஸ் மக்களின் நடவடிக்கைகையைப் பாரத்து அஞ்சுகின்றனர்.

பகிரவும்...