Main Menu

ஊரடங்கு காலத்தில் பிரான்ஸ் மக்களின் உடல் எடை அதிகரிப்பு!

ஊரடங்கு காலத்தில் பிரான்ஸ் மக்களின் பாதிக்கும் மேலானோருக்கு, உடல் எடை அதிகரித்துள்ளதாக, ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

உடற் பருமன் தொடர்பாக, இன்ஸ்டிட்யூட் ஃபிராங்காய்ஸ் டி ஓபினியன் பப்ளிக் (Ifop) நிறுவனம் நடத்திய ஆய்விலேயே இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதில், 57 சதவீதமான மக்கள் தங்கள் உடலின் எடை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 2.5 கிலோ எடை சராசரியாக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஆய்வில் ஆண்கள் சராசரியாக 2.7 கிலோ எடையும், பெண்கள் 2.3 கிலோ எடையும் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால், பிரான்ஸ் மக்கள் ஐம்பது நாட்களுக்கும் மேலாக வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...