கனடாவில் நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய மறுத்த கனேடிய நர்ஸ்கள்
கனேடிய நகரம் ஒன்றில் கொரோனா இருக்கிறதா என சந்தேகிக்கப்படும் நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய எட்மண்டன் நர்ஸ்கள் சிலர் மறுத்துள்ளனர்.
எட்மண்டன் நர்ஸ்கள் சுமார் 30 பேர் கொரோனா பரிசோதனை செய்ய மறுத்ததற்கு காரணம், அவர்களுக்கு N95 வகை மாஸ்குகள் வழங்கப்படவில்லை என்பதுதான் என நர்ஸ்கள் யூனியன் தெரிவித்துள்ளது.
நர்ஸ்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள நர்ஸ்கள் யூனியன், அவர்கள் பணியாற்ற மறுக்கும் தங்கள் உரிமையை பயன்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நர்ஸ்கள் தங்கள் பணியைச் செய்யவேண்டுமானால், அவர்கள் முதலில் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக N95 வகை மாஸ்குகள் தேவை என்று நம்புகிறார்கள்.
தாங்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான ஒரு விடயத்தைக் கேட்கும்போது, அது அவர்களுக்கு கேள்வி கேட்காமல் கொடுக்கப்படவேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.
இதுவரை கொரோனா இப்படித்தான் பரவுகிறது என்பதை அறிவியல் உறுதி செய்யவில்லை என்று கூறும் யூனியனின் துணைத்தலைவரான சாண்டி ஜான்சன், இப்படி பாதுகாப்பின்றி பணி செய்வதால் ஒரு நர்ஸுக்காவது கொரோனா தொற்று ஏற்படத்தான் போகிறது என்கிறார்.
ஆல்பர்ட்டாவைப் பொருத்தவரையில், அங்கு கொரோனாவுக்காக பரிசோதனை செய்வதற்காக பயன்படுத்தப்படும் உபகரணம், காது குடைவதற்காக நாம், முனையில் பஞ்சு பொருத்திய குச்சி ஒன்றை பயன்படுத்துவோம் அல்லவா, அது போன்ற ஒரு பொருள்தான் (nasopharyngeal swab) .
அந்த பஞ்சு பொருத்திய குச்சியை மூக்கு மற்றும் தொண்டைக்குள் செலுத்தி தேய்த்து எடுப்பார்கள்.
அப்படிச் செய்யும்போது நிச்சயம் அது நோயாளிக்கு தும்மல் அல்லது இருமலை ஏற்படுத்தும்.
அப்படியிருக்கும் நிலையில், சரியான பாதுகாப்பு இல்லாமல் நர்ஸ்கள் இந்த பணியை செய்தால், அவர்கள் மீது கொரோனா நோயாளி தும்மிவிட்டால், நிச்சயம் அது அவர்களை சிக்கலுக்கு ஆளாக்கிவிடும்.
ஆகவேதான் அவர்கள் தங்களுக்கு N95 வகை மாஸ்குகள் தேவை என்று கூறி, கொரோனா நோயாளிகளுக்கு பணி செய்ய மறுத்துள்ளார்கள்.
பகிரவும்...