Main Menu

இன்னிங்ஸ் மற்றும் 5 ஓட்டங்களினால் பாகிஸ்தானை வீழ்த்தியது அவுஸ்ரேலிய அணி!

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி, இன்னிங்ஸ் மற்றும் 5 ஓட்டங்களினால் தோல்வி அடைந்துள்ளது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸ்காக துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 240 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அவுஸ்ரேலிய அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ்காக துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்ரேலிய அணி 580 ஓட்டங்களை குவித்தது. டேவிட் வோர்னர் 154 ஓட்டங்களையும், லபுஸ்சேக்னே 185 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்திருந்தனர்.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணி, அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.

நேற்றைய ஆட்ட நேர முடிவில் 17 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 64 ஓட்டங்களை எடுத்திருந்தது. நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.

சிறிது நேரம் தாக்குப் பிடித்த தொடக்க ஆட்டக்காரர் ஷான் மசூத் 42 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து பாபர் அசாமுடன் இணைந்தார் மொஹமட் ரிஸ்வான் இருவரும் நிலைத்து நின்று போராடினர்.

சதம் அடித்த பாபர் 104 ஓட்டங்களிலும் ரிஸ்வான் 95 ஓட்டங்களிலும் ஆட்மிழந்தனர். அடுத்து வந்த யாசிர் ஷா 42 ஓட்டங்களை பெற்றார். அணியில் வேறு யாரும் நிலைத்து நின்று துடுப்பெடுத்தாடாத நிலையில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 335 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இதனால் அவுஸ்ரேலியா அணி இன்னிங்ஸ் மற்றும் 5 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

பகிரவும்...