Main Menu

வடக்கில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் தலைவர்களும் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு

வடக்கில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தனர்.

அந்தவகையில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் வாக்களித்தனர்.

அத்தோடு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் மற்றும் வடக்குமான அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோரும் வாக்களித்திருந்தனர்.