Main Menu

குழறுபடிகள் நடந்தால் வாக்களிப்பு ரத்து – தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை

அஞ்சல் வாக்குச் சீட்டு புள்ளடியிடும் மையங்களில் ஏதாவது  தலையீடுகளோ அல்லது அச்சுறுத்தும் முயற்சிகளோ இடம்பெற்றால், அந்த மையங்களில் இடம்பெற்ற வாக்களிப்பு ரத்து செய்யப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய எச்சரித்துள்ளார்.

”அரச பணியாளர்கள் அஞ்சல் வாக்குச் சீட்டுக்களில் தமது விருப்பத் தெரிவை குறிப்பிடுவதில், இரகசியத்தையும் சுதந்திரத்தையும் உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. யாருக்கு வாக்களிக்கப்பட்டது என்பதைக் கண்டறிய முடியாது.

அஞ்சல் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள், வரும் 31ஆம் நாளும், நொவம்பர் 1ஆம் நாளும் வாக்களிக்க முடியும்.

காவல்துறை திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள், நொவம்பர் 4ஆம், 5ஆம் நாள்களில் வாக்களிக்கலாம்.

இந்த நாட்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்கு, நொவம்பர் 7ஆம் நாள் வாக்களிக்க வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

தேர்தல் திணைக்கள அதிகாரிகளும், நொவம்பர் 7ஆம் நாள் வாக்களிக்க முடியும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...