Main Menu

கோட்டாபய ராஜபக்ச தாய் நாட்டிற்கு முதலிடம் வழங்க வேண்டும் – பல்லேகம ஹெமரதன தேரர்!

கோட்டாபய ராஜபக்ஷ தனது தனிப்பட்ட நலன்களை கவனத்தில் கொள்ளாமல் தாய் நாட்டை பாதுகாக்க முதலிடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைப் பொறுப்பை ஏற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு ஆசி வேண்டி ருவான்வெலிசாய விகாரையில் நேற்று(திங்கட்கிழமை) விசேட சமய வழிபாடுகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பல்லேகம ஹெமரதன தேரர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது அங்கு கருத்து வெளியிட்ட அவர், ’30 வருடகால யுத்தத்தை நிறைவு செய்து ரோஜா மலர் மலரும் தேசமாக இலங்கையை மாற்றிய போதும் இடையில் கடந்த வருடங்களில் நாடு குப்பை குழியாக மாறியுள்ளது.

நாட்டு மக்களுக்கும், தேரர்களுக்கும் கடந்த காலங்களில் பல துன்பங்களை எதிர்கொள்ள நேரிட்டது. ஆகவே நாடு விழுந்துள்ள பள்ளத்தில் இருந்து மீட்டு அனைவரது முகத்திலும் புன்முறுவலை ஏற்படுத்த வேண்டும் என்பதே தேரர்களின் எதிர்பார்ப்பு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தினால் நாட்டுக்கு பலமிக்க, பெருமைமிகு வேட்பாளர் ஒருவர் கிடைத்துள்ளார்’ என குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...