500 மில்லியன் பயணங்களை மேற்கொண்ட வெர்ஜின் ரயில்களின் சேவை முடிவுக்கு வந்தது
பிரித்தானியாவில் மிக நீண்ட காலமாக இயங்கிவந்த வெர்ஜின் ரயில்களின் சேவை முடிவுக்கு வந்துள்ளது.
1997 ஆம் ஆண்டில் இருந்து 22 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள வந்த குறித்த ரயில் நேற்று (சனிக்கிழமை) சேவையை நிறுத்திக் கொண்டது.
எனினும், இந்த வெர்ஜின் ரயில்களின் சேவைகள் அவந்தி மேற்கு கடற்கரைக்கு மாற்றப்படுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேர் ரிச்சார்ட் பிரான்சனின் வெர்ஜின் குழுமம் மற்றும் ஸ்ரேஜ்கோச் (Sir Richard Branson’s Virgin Group and Stagecoach) ஆகியோருக்குச் சொந்தமான குறித்த வெர்ஜின் ரயில்கள் கிட்டத்தட்ட 500 மில்லியன் பயணங்களை மேற்கொண்டுள்ளன.
இதன் இறுதிச் சேவை லண்டன் யூஸ்டனில் இருந்து நேற்று இரவு 21:42 GMT க்கு வொல்வர்ஹம்ரனுக்கு சென்றமை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சேர் ரிச்சார்ட் தங்கள் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர்களுடைய அற்புதான நம்பமுடியாத சேவைக்கு பாராட்டியுள்ளார்.
பகிரவும்...