49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்!
நெதர்லாந்தில் கருவள மருத்துவர் ஒருவருக்கு 49 பிள்ளைகளுக்குத் தந்தை என்பது மரபணு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிகிற்சைக்காக வந்த பெண்களுக்கு அவர்களின் விரும்பமின்றி தனது சொந்த விந்தைச் செலுத்தி பெண்களைச் கருவுறுச்செய்துள்ளார் ஜான் கர்பாத் என்ற கருவள மருத்துவர்.
ஜான் கர்பாத், 2009 வரை ரோட்டர்டாம் அருகே கருவுறுதல் சிகிற்சை நிலையத்தை நடத்தி வந்துள்ளார். அங்கு சிகிற்சைக்காக வந்த பெண்களிடமே அவர் தனது விந்தைச் செலுத்தி கருவுறுச் செய்துள்ளார்.
மருத்துவரின் தோற்றத்துடன் ஒரு குழுந்தைக்கு ஒன்றுமை இருந்ததால் 2017 ஆண்டு இவ்விடயம் குறித்து நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இவ்வழக்கில் விசாரணைகளை முன்னெடுத்த நீதிபதி கடந்த வெள்ளிக்கிழமை ஒரு குழந்தையின் டி.என்.ஏ ஆய்வுகளின் முடிவை வெளியிட்டு உறுதி செய்துள்ளார்.
கருவள மருத்துவர் ஜான் கார்பத் 2017 ஆம் ஆண்டு தனது 89 வயதில் உயிந்துவிட்டார் என்பது நினைவூட்டத்தக்கது.