31ம் நாள் நினைவு அஞ்சலி – திரு தில்லையம்பலம் விசுவலிங்கம் (விஞ்ஞான பட்டதாரி) 06/11/2023
தாயகத்தில் காரைநகர் வலந்தலை இலகடியைப் பிறப்பிடமாகவும் அராலி கொழும்பு நைஜீரியா ஆ்கிய இடங்களை வதிவிடமாகவும் கனடாவில் வசித்து வந்தவருமாகிய தில்லையம்பலம் விசுவலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவு அஞ்சலி. (சென் பெனடிக் கல்லூரி கொழும்பு மற்றும் சென் ஜோசப் கல்லூரி யாழ்ப்பாணம் ஆகியவற்றில் ஆசிரியராகவும், கனடா சைவசித்தாந்த மன்றத்தின் தலைவராகவும், அன்பு நெறிச்சஞ்சிகையின் நிர்வாக ஆசிரியராகவும் கடமையாற்றியவர்)
அன்னார் காலஞ்சென்ற தில்லையம்பலம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இளைப்பாறிய கல்லூரி அதிபர் நாகலிங்கம் முத்துமாரி தம்பதிகளின் அன்பு மருமகனும், வடிவழகாம்பாளின் அன்பு கணவரும், வாசுகி ( அவுஸ்திரேலியா), விசுவபாரதி (கனடா), வடிவானந்தன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சக்தி கணபதி(அவுஸ்திரேலியா), யசோதா (கனடா), சந்திரிக்கா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், அவுஸ்திரேலியா சிவகௌரி, அபிராமி, சரவணன் மற்றும் கனடா கவின், நிலான் ஆகியோரின் பாசமிகு பேரனும், மற்றும் காலஞ் சென்றவர்களான சிவசம்பு, தேவராசா, தர்மலிங்கம், நாகேஸ்வரி, இரத்தினேஸவரி மற்றும் இராஜேஸ்வரி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் , காலஞ்சென்றவர்களான பாக்கியம், ஞானாம்பிகை, இந்திராணி, மகேசன், திருவாதிரை மற்றும் கணேசமூர்த்தி (அவுஸ்திரேலியா), சிவராஜா (அவுஸ்திரேலியா), நடராஜா (இலங்கை )ஆகியோரின் அன்பு மைத்துனரும், சகுந்தலாதேவி (அவுஸ்திரேலியா), கெங்காதேவி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலரும் ஆவார்.
அமரர். தில்லையம்பலம் விசுவலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியில் அன்னாரின் ஆத்ம சாந்திக்காக நாமும் பிரார்த்திப்பதோடு குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்.