26ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர் சபாரத்தினம் சபாலிங்கம் (01/05/2019)
தாயகத்தில் வேலணையை சேர்ந்த பிரான்ஸ் Sarcelles இல் வசித்து வந்த அமரர். சபாரத்தினம் சபாலிங்கம் அவர்களின் 26ம் ஆண்டு நினைவு தினம் 01ம் திகதி மேமாதம் புதன்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
அன்னாரை இன்றைய தினம் நினைவு கூருவோர் : அன்பு மனைவி, அன்பு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகள், மச்சான்மார், மச்சாள்மார், அண்ணாமார், அண்ணிமார், பெறாமக்கள் , மருமக்கள் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள்.
அமரர்.சபாரத்தினம் சபாலிங்கம் அவர்களின் 26ம் ஆண்டு நினைவலைகளுடன் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்கிறது.
எமது வானொலியின் இன்றைய நிகழ்சிகள் அனைத்தையும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் ஸ்ரீஸ்கந்தராஜா குடும்பம்.
அவர்களுக்கும் எமது நன்றிகள்.
ஆண்டுகள் 26 ஓடி மறைந்தாலும் –
அண்ணா உங்கள் அன்பான நினைவுகள்
அன்றும் இன்றும் என்றென்றும்
எம்மோடு தொடரும் அண்ணா !
காலத்தால் அழியாத காவிய நாயகன் நீங்கள்
நல்லவர் வாழ்க்கையில் நயவஞ்சக நரிகளும் உண்டு
இந்த ஆகாயம் பூமி உள்ளவரை
உங்கள் புகழ் மங்காது அண்ணா!