24 மணித்தியாலத்தில், பிரான்ஸில் 330 பேர் உயிரிழப்பு
கடந்த 24 மணிநேரத்தில் 330 பேர் உயிரிழந்துள்ளதோடு, 1,365 பேர் குணமடைந்துள்ளனர் என இன்று செவ்வாயக்கிழமை சுகாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 234 பேர் மருத்துவமனைகளிலும், 96 பேர் மூதாளர் இல்லங்களிலும் உயிரிழந்துள்ளனர். தற்போது 24 775 பேர் மருத்துவமனைகளில் உள்ளதோடு, இவர்களில் 3 430 பேர் தீவிரிசிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 1,104 பேர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 987 மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 132,967ஆக பதிவாகியுள்ளதோடு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,531ஆக உயர்ந்துள்ளது. 52,736 பேர் குணமடைந்துள்ளனர்.
அரசாங்கத்தினால் நாளாந்தம் அடையாளப்படுத்தப்படும் நிற மண்டலங்களில், தமிழர்கள் செறிந்து வாழும் இல்-டு-பிரான்ஸ் மண்டலம் தொடந்தும் வைரஸ் உயிர்ப்புடன் உள்ள பிராந்தியமாக மட்டுமல்லாது, மருத்துவனைகளில் நெருக்கடியுள்ள பிராந்தியமாக இன்றும் சிவப்பு மண்டலாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.