Main Menu

23-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி நேபாள வீரர் சாதனை

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பலவிதமான சாதனைகளை படைத்து வருகின்றனர். ஒருவரால் செய்ய முடியாத அரிய செயல்களை செய்பவர் சமூகத்தில் சாதனையாளராக கருதப்படுகிறார்.

அவர் சமூகத்தின் பெருமை மிகுந்த மனிதராக போற்றப்படுகிறார். அது அவரை மாத்திரமன்றி அவரது சமூகம் மற்றும் நாட்டையும் பெருமை படுத்துகின்றது. சிலர் பொழுது போக்காகவோ, தமது உடல் பயிற்சிக்காவோ செய்யும் சில செயல்களும் பின்னாளில் பெரும் சாதனைகளாக மாறிய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

தமக்கு அருகில் உள்ள ஒரு சிகரத்தையும் சவாலாக கருதாமல் ஏறிச் சென்று சாதனைப் படைத்த பலரில் இவரும் ஒருவர்.  நேபாளத்தைச் சேர்ந்த கமி ரிதா ஷெர்பா என்பவர் 23-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனையை படைத்திருக்கின்றார்.

49 வயதான கமி ரிதா ஷெர்பா 8 ஆயிரத்து 850 மீட்டர் உயரம் கொண்ட உலகின் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரத்தின் பகுதியை 1994-ம் ஆண்டு முதல் ஏறி வருகிறார்.

2017-ம் ஆண்டு அபா ஷெர்பா, புர்பா தாஷி ஷெர்பா ஆகிய தனது சக வீரர்களுடன் எவரெஸ்ட் சிகரத்தை 21-வது முறையாக ஏறி கமி ரிதா ஷெர்பா சாதனையை பகிர்ந்து கொண்டார்.

மற்ற 2 வீரர்களும் ஓய்வு பெற்ற நிலையில் கடந்த ஆண்டு 22-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி கமி ரிதா ஷெர்பா புதிய சாதனையை படைத்தார். இந்த நிலையில் 23-வது முறையாக தற்போது எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு தன்னுடைய முந்தைய சாதனையை அவரே முறியடித்துள்ளார்.

இவர் தவிர பல வௌிநாட்டு வீரர்களும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளனர். எனினும் எண்ணிக்கை அடிப்படையில் இவரே முதன்மை வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...