Day: April 28, 2026
திருச்செந்தூர் கோயிலில் தவெக தலைவர் விஜய் சாமி தரிசனம்

தவெக தலைவர் விஜய் இன்று காலை திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த 23-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் 85 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்தமேலும் படிக்க...
இந்தோனேசியாவில் ரயில்கள் மோதிக்கொண்ட விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா அருகே ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் 84 பேர் காயமடைந்துள்ளனர். தலைநகர் ஜகார்த்தாவுக்கு வெளியே உள்ள பெகாசியில் திங்கட்கிழமை இரவு ஒரு பயணிகள் ரயிலும், ஒரு நீண்டமேலும் படிக்க...
சுதந்திர நாடுகள் மீது தனது கொள்கையை திணிக்கும் நிலையில் இனி அமெரிக்கா இல்லை: ஈரான்

“பிறநாடுகள் என்ன செய்ய வேண்டும் என்பதை அமெரிக்காவால் இனி திணிக்க முடியாது. சுதந்திரமான நாடுகள் மீது தனது கொள்கையை திணிக்கும் நிலையில் இனி அமெரிக்கா இல்லை.” என்று ஈரான் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரெசா தலாய் நிக் தெரிவித்துள்ளார். மேற்குமேலும் படிக்க...
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவிலிருந்து வெளியேறினார் மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார். இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுக்காக வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் இன்று (28) முற்பகல் ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தார். அதன்படி,மேலும் படிக்க...
தமிழக கடற்தொழிலாளர்-களால் தாக்கப்பட்ட இலங்கை கடற்தொழிலாளி வைத்திய சாலையில் அனுமதி

யாழ்ப்பாணத்தை சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவரை தமிழக கடற்தொழிலாளர்கள் கடுமையாக தாக்கி தமிழகத்திற்கு கடத்தி சென்ற நிலையில் தமிழக கடலோர காவல் படையினரால் குறித்த கடற்தொழிலாளி மீட்கப்பட்டு , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மயிலிட்டி மற்றும் வளலாய் பகுதியை சேர்ந்த மூன்று கடற்தொழிலாளர்கள்மேலும் படிக்க...
சர்வதேச சமாதான நடைபயணத்தின் இறுதி நாள் இன்று – கொழும்பில் விசேட போக்குவரத்து

“எஹிபஸ்ஸிக்கோ” (Ehipassiko) சர்வதேச சமாதான நடைபயணத்தின் இறுதி நாளான இன்று அதற்கான அரச விழா ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. இன்று நண்பகல் 12:00 மணிக்கு களனி ரஜமகா விகாரையிலிருந்து ஆரம்பமாகும் இந்த நடைபயணம், சுதந்திர சதுக்கத்தைமேலும் படிக்க...
மேற்கு வங்கத்தில் 2ஆம் கட்ட தேர்தல் நாளை

மேற்கு வங்கத்தில் 2ஆம் கட்ட தேர்தலுக்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்தது. அங்கு 142 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாளை மாலை வாக்குப்பதிவு முடிந்ததும், தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்மேலும் படிக்க...
தமிழகத்தில் தஞ்சம் அடைந்திருந்த இலங்கையர்கள் சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயற்சி -படகோட்டி உட்பட மேலும் மூவர் கைது

இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் திகதியிலிருந்து இலங்கை தமிழர்கள் 300-க்கும் மேற்பட்டோர் சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தனுஷ்கோடிக்கு சென்று தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர்.மேலும் படிக்க...
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் புனிதத் தலத்தில் பிரதமர் விசேட வழிபாடு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்றுமுன்தினம்( 26 ஆம் திகதி ) வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம புனிதத் தலத்தை வழிபட்டு அருள் பெற்றுக்கொண்டார். முதலில், வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமத்தின் கிரிவெஹெர ராஜமஹா விஹாரையின் விஹாராதிபதியும், ருஹுணு மாகம்பத்துவவின் பிரதான சங்கநாயகருமான வணக்கத்திற்குரியமேலும் படிக்க...
திறைசேரி டொலர் திருட்டு: இன்று கூடுகிறது அரசாங்க நிதி பற்றிய குழு

திறைசேரியிலிருந்து வெளித்தரப்பு ஒன்றினால் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக பாராளுமன்றத்தில் அரசாங்க நிதி பற்றிய குழு இன்று (28) கூடவுள்ளது. இந்தக் கலந்துரையாடலின் போது, நிதி அமைச்சின் செயலாளரை குழுவின் முன்னிலையில் அழைப்பது குறித்து தீர்மானிக்கப்படும்மேலும் படிக்க...
யாழில் மனைவி மீதும் அவரது சகோதரன் மீதும் கத்தி குத்து தாக்குதல்

குடும்பத் தகராறு காரணமாக நீதிமன்றம் சென்று திரும்பிய மனைவி மற்றும் அவரது சகோதரர் மீது, கணவன் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் காயமடைந்த இருவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தம்பதியினரிடையே நிலவி வரும் குடும்பப் பிணக்கு தொடர்பான வழக்கு, சாவகச்சேரிமேலும் படிக்க...
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாக மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தனது கைத்துப்பாக்கியை காட்டி தமக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக ஒரு தரப்பினர் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினருக்கும் , மற்றுமொருமேலும் படிக்க...

