Main Menu

திமுக தலைவர் முக ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு

சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை மநீம தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 6-ந்தேதி நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 159 இடங்களை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. தி.மு.க. மட்டுமே தனியாக 125 இடங்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தி.மு.க. தனி மெஜாரிட்டி பெற்றது. இதையடுத்து தி.மு.க. ஆட்சி அமைக்கிறது. மு.க.ஸ்டாலின் 7ந்தேதி முதல்-அமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திமுக தலைவர் ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 

தமிழக முதல்வராக 7ந்தேதி ஸ்டாலின் பதவியேற்க உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

பகிரவும்...