Day: February 8, 2021
தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1000 ரூபாயாக அதிகரிப்பு!
பல வருடங்களாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் கோரிய நாளொன்றுக்கான அடிப்படை சம்பளமான 1000 ரூபாயை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படை சம்பளத்தை 900 ரூபாய் வரை அதிகரிப்பதற்குமேலும் படிக்க...
பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணியில் பங்கேற்றவர்களுக்கு எதிராக B அறிக்கை தாக்கல்!
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் மக்கள் எழுச்சி பேரணியில் பங்கேற்றவர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்காக முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் புதிய B அறிக்கையொன்று இன்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவுப் பொலிஸாரால் ஏற்கனவேமேலும் படிக்க...
நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை!
நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை செய்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதவான் ஏ. ஜீட்சன் முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 05மேலும் படிக்க...
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 10.66 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10.66 கோடியைக் கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும்மேலும் படிக்க...
சசிகலா வந்த காரில் இருந்து அதிமுக கொடி அகற்றம்
ஓசூர் ஜூஜூவாடி அருகே சசிகலா வந்து கொண்டிருந்த காரில் இருந்து அதிமுக கொடி அகற்றப்பட்டது.ஓசூர்: பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்திய காரில் சசிகலா இன்று தமிழகம் புறப்பட்டார். சென்னை புறப்படும்போது பெங்களூவில் ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி சசிகலா, டிடிவிமேலும் படிக்க...
சுமந்திரனின் பாதுகாப்புக்கு வழங்கப் பட்டிருந்த சிறப்பு அதிரடிப் படை மீளப் பெறப்பட்டது?
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப் படை மீளப்பெறப்பட்டுள்ளது. நேற்றிரவு கிடைத்த திடீர் பணிப்பில் சிறப்பு அதிரடிப் படைப் பாதுகாப்பு மீளப்பெறப்பட்டுள்ளதாகவும், காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சிறப்பு அதிரடிப்மேலும் படிக்க...
அவுஸ்ரேலியப் பத்திரிகையாளர் சீனாவில் கைது!
சீன அரச தொலைக்காட்சியின் தொகுப்பாளராகப் பணியாற்றிய அவுஸ்ரேலியப் பத்திரிகையாளர் செங் லீ, சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அரச இரகசியங்களை வழங்கியதற்காக சட்ட ரீதியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். செங் லீ சீனாவில் தடுத்து வைக்கப்பட்டு கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில், விசாரணைக்காக சந்தேகத்தின்மேலும் படிக்க...
பெங்களூருவில் இருந்து தமிழகம் புறப்பட்டார் சசிகலா!
பெங்களூருவில் இருந்து சசிகலா இன்று (திங்கட்கிழமை) சென்னை வருகிறார். அ.தி.மு.க கொடியை பயன்படுத்தக்கூடாது என பொலிஸார் அறிவுறுத்திய நிலையில் காரில் மீண்டும் அதிகமுக கொடியுடன் தமிழகம் புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சென்னை வரும் சசிகலாவுக்கு தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் இருந்து சென்னை இல்லம்மேலும் படிக்க...
அ.தி.மு.க கொடியை சசிகலா பயன்படுத்த கூடாது ; காவல்துறை அறிக்கை!
அ.தி.மு.க கொடியை சசிகலா பயன்படுத்த கூடாது என்றும் தமிழகத்திற்குள் 5 வாகனங்கள் மட்டுமே பின்தொடர்ந்து வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிமுக கட்சியில் அடிப்படை உறுப்பினராக இல்லாத சசிகலா, அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என முறைப்பாடு அளிக்கப்பட்டதை தொடர்ந்து கிருஷ்ணகிரி உட்கோட்டம்மேலும் படிக்க...
ஜனாதிபதி மியன்மார் பாணியிலான இராணுவ ஆட்சிக்கு முயல்கின்றார் – சட்டத்தரணிகள் சாடல்
ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ மியன்மார் பாணியிலான இராணுவ ஆட்சிக்கு முயல்கின்றார் என சட்டத்தரணி சிரால் லக்திலக தெரிவித்துள்ளார். தேசிய நூலகம் மற்றும் ஆவண சேவைகள் வாரியத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய சட்டத்தரணி சிரால் லக்திலக, ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தேர்தலில்மேலும் படிக்க...
‘மரபுவழித் தாயகம்-சுயநிர்ணயம்-தமிழ் தேசியம்’: தமிழினத்தின் பேரெழுச்சியில் மீண்டும் பிரகடனம்!
வடக்கு கிழக்குத் தாயகம் முழுவதுமாக ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி இன்று பொலிகண்டியில் பேரெழுச்சியுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், முன்னெடுக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் பேரணியின் நிறைவில் வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புக்களால் பிரகடனம் வாசிக்கப்பட்டது.மேலும் படிக்க...
சுயாதீன மனித உரிமை குறித்த ஆணைக்குழுவின் செயலாளராக சிவஞானசோதி நியமிப்பு!
சுயாதீன மனித உரிமை தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளராக முன்னாள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட மனித உரிமை தொடர்பான ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை மீளாய்வு செய்து அரசாங்க கொள்கைக்கு அமைவாக அவற்றைமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர்.திரு. இராசகுணம் தனபாலசிங்கம் (ரவி) தேவி மகால் உணவக உரிமையாளர் (08/02/2021)
தாயகத்தில் அளவெட்டியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Stade de France (Saint-Denis) இல் வசித்தவருமான இராசகுணம் தனபாலசிங்கம் (ரவி) அவர்கள் (Devi Mahal Restaurant உரிமையாளர்) 6ம் திகதி பெப்ரவரி மாதம் சனிக்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலம்மேலும் படிக்க...