Main Menu

பிரான்ஸில் அதிகரிக்கும் கொவிட்-19 தொற்று: 20இற்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு மீண்டும் பூட்டு

பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அங்கு கிட்டத்தட்ட 20 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

அத்துடன், பிரான்ஸில் 50 இற்கும் மேற்ப்பட்ட கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுத் தொகுதிகள் இனங்காணப்பட்டுள்ளன.

பாலர் பாடசாலைகளில் பணிபுரியும் மாநகரசபை ஊழியர்களிற்குக் கொரோனத் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, துலூஸ் நகரபிதா பல ஆரம்பப் பாடசாலைகளை மறு அறிவித்தல் வரை மூடும்படி உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, வில்லெனுவே-டி அஸ்க் (Villeneuve-d’Ascq) இல் மூன்று பாடசாலைகள் உடனடியாக மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.

மற்றவர்களிற்கான கொரோனப் பரிசோதனைளும் சிறுவர்களிற்கான பரிசோதனைகளும் நடத்தப்பட்டு, மீண்டும் பாடசாலைகளில் கிருமி நிக்கம் செய்யப்பட்டு, தொற்றுக்களின் அடிப்படையில், மட்டுமே மேற்கொண்டு முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...