Main Menu

2020 ஒலிம்பிக் போட்டிகளில் கனடா கலந்துகொள்ளாது

கனடாவின் ஒலிம்பிக் குழு இவ்வாண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவித்துள்ளது.

கனடாவின் உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் குழுவும் உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளப்போவதில்லை.

அதிகரித்து வரும் COVID-19 கிருமிப் பரவல் காரணமாக, ஜப்பானில் ஜூலை மாதம் போட்டிகளை நடத்துவதற்குப் பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.

அனைத்து ஒலிம்பிக் போட்டிகளையும் ஓராண்டு தள்ளிவைக்கும்படி கனடா கேட்டுக்கொண்டன.

இதற்கிடையே, ஆஸ்திரேலியாவின் ஒலிம்பிக் குழு, அடுத்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தயாராகும்படி தனது விளையாட்டு வீரர்களிடம் அறிவுறுத்தி வருகிறது.

வீரர்களின் உடல்நலனில்தான் அக்கறை செலுத்தப்படவேண்டும் என்று குழு தெரிவித்தது.

பகிரவும்...