Friday, March 15th, 2019

 

மசூத் அசாரின் சொத்துக்களை முடக்கியது பிரான்ஸ்!

பிரான்ஸ் நாட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாரின் சொத்துகளை பிரான்ஸ் அரசு முடக்கியது. சர்வதேசப் பயங்கரவாதப் பட்டியலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த மசூத் அசாரை சேர்க்க சீனா முட்டுக்கட்டை போட்டதை தொடர்ந்து, பிரான்ஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. புல்வாமா பயங்கரவாத தாக்குதல் சமயத்தில் பிரான்ஸ் அரசு வெளியிட்ட அறிக்கையில், தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில், இந்தியாவுக்கு எப்போதும் பிரான்ஸ் அரசு துணை நிற்கும் என்று தெரிவித்திருந்தது. ஜம்மு – காஷ்மீர் புல்வாமாவில் கடந்த பிப்.14ஆம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பொறுப்பேற்றது. இதைத்தொடர்ந்து, தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத தலைவர் மசூத் அசார் பெயரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் இந்தியா வலியுறுத்திமேலும் படிக்க…


பறித்த பணத்தை திருப்பிக் கொடுத்த திருடன்! (காணொளி)

பேங்கில் ஜீரோ பேலன்ஸ் இருப்பதை பார்த்து சிரித்துக் கொண்டே பணத்தை கொடுத்து விட்டு சென்று விடுகிறான். இன்றைய நாள் இணைய உலகில் மக்களின் கருணையையும் பாராட்டையும் பெற்றவர் ஒரு திருடர் இன்றைய நாள் இணைய உலகில் மக்களின் கருணையையும் பாராட்டையும் பெற்றவர் ஒரு திருடர் என்பதை கேட்டால் ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா… உண்மைதான் சீனாவில் நடந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. சீனாவின் ஹியான் நகரில் ஏடிஎம் பணம் எடுத்துக் கொண்டிருந்த பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டுகிறான் ஒரு திருடன். பயந்து போன அந்தப் பெண் 2,500 யான் பணத்தைக் கொடுத்து விட்டால், அதன் பின் பேலன்ஸ் எவ்வளவு இருக்கு என்பதை காட்டச் சொன்ன திருடன் பேங்கில் ஜீரோ பேலன்ஸ் இருப்பதை பார்த்து சிரித்துக் கொண்டே பணத்தை கொடுத்து விட்டு சென்று விடுகிறான். இந்த காட்சி அந்தமேலும் படிக்க…


ஜெனிவாவில் பரிசுத்தம் இல்லாத வெள்ளையார்கள் எம்மீது விசாரணைகளை நடத்துகின்றனர்-மனோ கணேசன்

ஜெனிவாவில் பரிசுத்தம் இல்லாத வெள்ளையார்கள் எம்மீது விசாரணைகளை நடத்துகின்றனர் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அத்துடன் நாடு என்ற வகையில் நல்லிணக்கத்தை இழந்தமையே ஜெனிவாவில் இலங்கைப் பிரச்சினையைக் கையாள்வதற்குக் காரணம் என அவர் குறிப்பிட்டார். ‘மொழி வளர்ப்போம் மனதை வெல்வோம்’ என்னும் கருப்பொருளில் அரசகரும மொழிக் கொள்கையை பாடசாலை மாணவரிடையே நடைமுறைபடுத்தும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தேசிய ஒருமைப்பாடு,அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் இதனை கூறினார். அவர் தெரிவிக்கையில், “ஜெனிவாவில் பரிசுத்தம் இல்லாத வெள்ளையார்கள் எம்மீது விசாரணைகளை நடத்துகின்றனர். அவர்களின் பிழைகள் இலங்கையில் இடம்பெற்றதை விடவும் பெரியவை. ஒரு வகையில் இது நகைச்சுவையானது. நாட்டில் உள்ளவர்கள் இரு மொழிகளையும் கற்றால் இவ்வாறான பிரச்சினையிருக்காது. நாட்டில் மிகப்பெரிய தேசியப் பிரச்சினை உள்ளதாகத்மேலும் படிக்க…


சிலாவத்துறையில் கடற்படையினரை வெளியேற்றக்கோரி மக்கள் பாரிய ஆர்ப்பாட்டப்பேரணி!

சிலாவத்துறையில் கடற்படையினரை வெளியேற்றக்கோரி மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடற்படை முகாமுக்கு முன் 24 நாட்களாகவும் போராட்டம் தொடர்கின்றநிலையில் இன்று குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலாவத்துறையில் மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை அகற்றி தமது காணிகளை வழங்கக் கோரியே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சிலாவத்துறையில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் இருந்து பல நூற்றுக்கணக்கான முஸ்ஸீம் மக்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கடற்படை முகாமை நோக்கி பேரணியாகச் சென்றனர். பின்னர் சிலாபத்துறையில்  24 நாட்களாக போராட்டம் இடம்பெறும் பகுதிக்குச் சென்ற மக்கள் வீதிக்கு அருகில் நின்று கோசமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக மக்களின் காணிகளில் உள்ள கடற்படையினரை வெளியேற்றி குறித்த காணியை மீண்டும் மக்களுக்கு வழங்கக்கோரி போராட்டத்தை முன்னெடுத்தனர். குறித்த போராட்டத்தில் உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள்,மேலும் படிக்க…


எழுச்சிப் பேரணிக்கு அனைவரும் அணிதிரள வேண்டும் – தமிழர் விடுதலைக் கூட்டணி

எழுச்சிப் பேரணிக்கு தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றாக அணி திரண்டு குரல்கொடுக்க வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், “யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் எழுச்சிப் பேரணியில் கட்சிபேதம் பாராது தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றாக அணிதிரண்டு குரல் கொடுக்க வேண்டும். யுத்தம் முடிந்து பத்து வருடங்கள் ஆகியும், தமிழ் மக்களின் கோரிக்கைககள் அனைத்தும் கவனத்திற்கொள்ளப்படவில்லை. எமது மக்கள் வேதனையின் விளிம்பில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். யாரிடம் போய் எதைக் கேட்பது என்ற விரக்தியில் துவண்டுபோய்விட்டார்கள். இந்த எழுச்சிப் பேரணியாவது சம்பந்தப்பட்டவர்களின் காதுகளுக்குப் போய்ச் சேரட்டும். இழக்கக் கூடாதவற்றை எல்லாம் இழந்துவிட்டு, இழப்பதற்கு எஞ்சி இருக்கும் உயிரைத் தவர வேறெதுவும் இல்லை என்று ஏங்கி தவிக்கும் மக்களின்மேலும் படிக்க…


மைத்திரி – கென்யா ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கென்யா ஜனாதிபதி உஹூரு கென்யாடா ஆகியோர் இடையில் நேற்று (வியாழக்கிழமை) மாலை சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கென்யாவின் நைரேபி நகரில் நடைபெற ஐக்கிய நாடுகள் சுற்றாடல் மாநாட்டில் கலந்துகொள்ள அங்கு சென்றுள்ள ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சுற்றாடல் மாநாட்டின் நான்காவது கூட்டத் தொடரை வெற்றிகரமாக ஒழுங்கு செய்தமை தொடர்பாக தனது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார். மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்த உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கை கூடுதலான நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். கென்யா வெளிவிவகார அமைச்சர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். அப்போது இரு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்படுத்தப்பட்ட இணப்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் கவனம் செலுத்தியுள்ளனர். 1970 ஆம் ஆண்டு உத்தியோகபூர்வமான ராஜதந்திர தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட இலங்கை மற்றும் கென்யா இடையில் நட்புறவானமேலும் படிக்க…


மலேசியாவில் நச்சு இரசாயனக் கசிவு: 2,700-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

மலேசியாவில் உள்ள பாசிர் கூடாங் எனும் பகுதியில் ஏற்பட்ட நச்சு இரசாயனக் கசிவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,700-க்கும் மேல் அதிகரித்துள்ளது. பாசிர் கூடாங்கில் நேற்று(வியாழக்கிழமை) நச்சு இரசாயனக் கசிவு சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்றுப் பிற்பகல் வெளியான தகவல்களின் படி, 7 பேர் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். பாசிர் கூடாங்கின் இரண்டு வைத்தியசாலைகளில் கிட்டத்தட்ட 1,900 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.ஏனைய வைத்தியசாலைகளில் மேலும் சுமார் 860 பேருக்குச் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. நச்சு இரசாயனக் கசிவால் பலரும் மருத்துவச் சிகிச்சை நாடி வருகின்றனர். சுவாசப் பிரச்சினை, மயக்கம், வாந்தி போன்றவற்றால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாசிர் கூடாங்கில் உள்ள 111 பாடசாலைகளையும் மூடுவதற்கு மலேசியக் கல்வி அமைச்சு நேற்று உத்தரவிட்டுள்ளது.பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 92 பாலர்பாடசாலைகளும்  மூடப்பட்டுள்ளன. அங்கு அவசரநிலையை அறிவிப்பதற்கான தேவை இல்லை என அந்நாட்டுப் பிரதமர் மகாதீர் முகமது கூறியிருக்கிறார்.இருப்பினும்மேலும் படிக்க…


கேம்பினோ மாபியா கும்பலின் தலைவர் பிரான்ஸிஸ்கோ கொல்லப்பட்டார்

குற்றம் சாட்டப்பட்டிருந்த அமெரிக்காவின் கேம்பினோ மாபியா கும்பலின் தலைவன் பிரான்ஸிஸ்கோ கேலி, அவரது வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன் தினம் (புதன்கிழமை) மாலை, ஸ்டேடன் தீவில் உள்ள கேலியின் வீட்டில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது என NYPD இன் துப்பறிவாளர் டெர்மோர்ட் சீ நேற்று தெரிவித்துள்ளார். குறித்த நபர் அவரது வீட்டு வாசலில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி கிடந்த நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. விரைந்து வைத்தியசாலைக்கு அழைத்து  செல்லப்பட்ட போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். கொலை தொடர்பான விசாரணைகள் முன்னெடுத்து வரப்படுகிறது என பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர். “வெளிப்படையான மனிதர்” என அழைக்கப்படும் 53 வயதான கேலி கடந்த 2015ம் ஆண்டு முதல் அமெரிக்கா மற்றும் இத்தாலியில் கேம்பினோ  மாபியா கும்பலை வழி நடத்தி வந்துள்ளதாகமேலும் படிக்க…


தி.மு.க போட்டியிடும் தொகுதிகளை அறிவித்தார் ஸ்டாலின்

நடைபெறவுள்ள 2019ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க, 20 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேரதல் குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மு.க.ஸ்டாலின் இதனை குறிப்பிட்டுள்ளார். தென்.சென்னை, மத்திய சென்னை, வட.சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், திருவண்ணாமலை, சேலம், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நீலகிரி, பொள்ளாச்சி, தென்காசி, தஞ்சாவூர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய 20 தொகுதிகளில் போட்டியிடப்போவதாக அவர் அறிவித்துள்ளார். மேலும் தேர்தல் நடவடிக்கைகளை, குறித்த பகுதியில் தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை ஏனைய அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து யாழில் விசேட கலந்துரையாடல்

சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தின் ஏற்பாட்டில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் இலங்கையில் ஜனநாயகத்தின் எதிர்காலமும் என்ற தலைப்பிலான விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் எதிர்வரும் 20ஆம் திகதி புதன்கிழமை 3.30 மணியளவில் கொக்குவில் சந்தியிலுள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வன்னி மாவட்ட செயலாளர் என்.பிரதீபன் தலைமையில் இடம்பெறவுள்ள இக்கலந்துரையாடலில் பிரதான உரையினை முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சேனாதீர குணத்திலக ஆற்றவுள்ளார். இலங்கை அரசாங்கத்தால், நாற்பது ஆண்டுகளாக அமுலில் உள்ள, பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றாக அமுல்படுத்தப்படவுள்ள மிகவும் கொடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக முழுமையாக ஆராயவுள்ள இந்த உரையைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. அரசியல், பொருளாதார, சமூக, விஞ்ஞான, கலை, இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் இந்தமேலும் படிக்க…


பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: மாணவர்கள் 2ஆவது நாளாகவும் போராட்டம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து 2ஆவது நாளாகவும் மாணவர்கள் போராட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தையே பெரும் துயரத்தில் ஆழ்த்திய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து அரசியல் கட்சிகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் புதுகோட்டை அரசு கல்லூரி கலை கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து 2ஆவது நாளாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கடும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டுமென மாணவர்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர். இவ்வாறு மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தை தொடர்ந்து பொள்ளாச்சி மற்றும் உடுமலைபேட்டையிலுள்ள கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


வடக்கின் அபிவிருத்தி குறித்து விஜயகலா- மஹிந்த தரப்பிடையே வாய்த்தர்க்கம்

தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக இனியும் கூற முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கான அடிப்படை தேவைகள் வடக்கு, கிழக்கு, தெற்கு என பல்வேறு மாகாணங்களிலும் பூர்த்தி செய்யப்படாத நிலையில் காணப்படுவதாக மஹிந்த அமரவீர தெரிவித்தார். இதன்போது குறுக்கிட்டு பேசிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ”உங்களது ஆட்சிக் காலத்தில் வடக்கிற்கு எவ்வித அபிவிருத்தியும் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால், நாம் ஆட்சிக்கு வந்த நான்கு வருடங்களில் வடக்கிற்கான பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து மன்றில் தொடர்ந்து உரையாற்றிய மஹிந்த அமரவீர, ”வடக்கில் எவ்வித பிரச்சினைகளும் இல்லையென்றால் அது மகிழ்ச்சியானது. அதனை ஜெனீவாவிற்கும்மேலும் படிக்க…


வடக்கிற்கு புதிய பல்கலைக்கழகம்!- ஓரிரு வாரங்களில் வர்த்தமானி அறிவிப்பு

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வன்னி பல்கலைக்கழகமாக தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அதன்படி இதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கிழக்கில் இரண்டு பல்கலைக்கழகங்கள் காணப்படுகின்ற போதிலும், பிரச்சினைகள் காரணமாக வடக்கு மாகாணத்திற்கு ஒரு பல்கலைக்கழகம் மாத்திரமே காணப்படுகிறது. இந்நிலையில், யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வன்னிப் பல்கலைக்கழகமாக தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயர் கல்வியானது மிகவும் முக்கியமானதாகும். எனவே, அதனை மேம்படுத்துவது அவசியமாகும். பல்கலைக்கழகத்திற்கு பிரவேசிப்போர் எண்ணிக்கை கடந்த 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2018இல் அதிகரித்துள்ளது. அது பாராட்டத்தக்கது. இந்நிலையில், மருத்துவ பீடத்திற்கானமேலும் படிக்க…


கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இலங்கை உள்ளது – சம்பிக்க

கடந்த காலங்களில் பெற்றுக்கொண்ட கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாய நிலையில், இலங்கை காணப்படுவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மேலும், இதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். திருகோணமலையில், நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நாடு தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் தற்போது முன்வைக்கப்படுகின்றன. அரசாங்கம் சரியில்லை என்றும் கடனில் நாடு தத்தளிக்கிறது என்றும் அரசியல்வாதிகள் ஊழல்வாதிகள் என தொடர்ச்சியாக விமர்ச்சிக்கப்படுகிறது. சிலர், இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறிவருகிறார்கள். இலங்கையிலிருந்து வெளியேறிய பெரும்பான்மையான சிங்களவர்கள் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார்கள். அதேபோல், வடக்கிலிருந்து வெளியேறிய பெரும்பான்மையான தமிழர்கள் கனடாவில் குடியேறியுள்ளார்கள். இதிலிருந்தே எமது மக்கள் வெளியேறும் வீதம் எந்தளவில் உள்ளது என எமக்கு தெரிந்துக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. எனினும்,மேலும் படிக்க…


ஐ.நா. ஆணையாளரின் அறிக்கையை உதாசீனம் செய்யக்கூடாது – சந்திரிகா

இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை மிகவும் பாரதூரமான அறிக்கை என்றும் அதனை எவரும் உதாசீனம் செய்யக்கூடாது என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். அத்தோடு 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி இடம்பெற்ற அரசியல் சூழ்ச்சியே இலங்கை மீதான ஐ.நா. வின் இறுக்கமான பிடிக்குக் காரணம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த செவ்வியில் அவர் மேலும் தெரிவிக்கையில் “மைத்திரி – மஹிந்த கூட்டணியின் அரசியல் சூழ்ச்சியால் இலங்கை பெரும் விளைவுகளை எதிர்காலத்தில் சந்திக்க வேண்டிவரும் என நான் ஏற்கனவே எச்சரித்தேன். அதன் ஒரு பிரதிபலிப்பே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் காட்டமான அறிக்கையாகும். இலங்கையில் அரசியல் சூழ்ச்சியை முடிவுக்கொண்டுவர அயராது பாடுபட்ட வெளிநாடுகள் தற்போது ஜெனிவாவில் இலங்கையைமேலும் படிக்க…


நியூசிலாந்துக்கு இது ஒரு இருண்ட நாள்: பிரதமர் ஜெசிந்தா

நியூசிலாந்தில் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில்  இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட  துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை பயங்கரவாத தாக்குதல் என குறிப்பிட்டுள்ள அந்நாட்டு பிரதமர் நியூஸிலாந்திற்கு இது ஒரு இருண்ட நாள் என தெரிவித்துள்ளார். நியூசிலாந்தில் இடம்பெற்ற தாக்குதலை தொடர்ந்து ஊடகங்களை சந்தித்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டன் இவ்வாறு தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் இது ஒரு கொடூரமான வன்முறை; பல உயிரிழப்புகளுக்கு காரணமாகியுள்ளது. கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவர் நியூசிலாந்து பிரஜை ஆவார்.  இது ஒரு தீவிர வலதுசாரி வன்முறை என  குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டிருப்பதாக பிந்திய நியூஸிலாந்து செய்திகள் தெரிவிக்கின்றன. நியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு : நால்வர் கைது (2ஆம் இணைப்பு) நியூசிலாந்தில் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள மசூதி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டுடன்மேலும் படிக்க…


31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் – அமரர். பரமேஸ்வரி கிருஷ்ணன் (15/03/2019)

தாயகத்தில் சங்குவேலி மானிப்பாயை வதிவிடமாக கொண்ட திருமதி.பரமேஸ்வரி கிருஷ்ணன் அவர்களின் 31ம் நாள் நினைவு தினம் இன்று (15/03/2019) வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. அமரர். பரமேஸ்வரி கிருஷ்ணன் அவர்களை நினைவு கூருபவர்கள். அன்புப் பிள்ளைகள் – பாலசிங்கம் (பவா) ,டலிக்குமார் (யோகன்) , றாஜினி தேவி(தேவி) ,கமலாம்பிகை (கமலா) ,சாந்தி பாஸ்கரன் , ஜெயந்தி (காலம் சென்ற) அன்பு மருமக்கள் வசந்தாதேவி (குஞ்சு) சறோஜா தேவி (சறோ) ஸ்ரீஸ்கந்தராஜா, இராசநாயகம் (கருணா), பாஸ்கரன் பேரப்பிள்ளைகள் – டினேஷ் ,நியாஷ் , ஆஷா, சிந்து , ரூபி , மைதிலி, சுமன் , லக்ஸன் , பகிதர், சதீஷ், ரஜீவ்,கபில், றெம்சி , சுலக்சன், டிலக்சன், கம்சன் , ஜான்சன், ஜக்சன்,ஜதுஷன், ஜாக்கி ,அபிசாந்த், அபிநயன், அருஷ்ணன், மற்றும் பூட்டப்பிள்ளைகள் , உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அன்புத் தாயைமேலும் படிக்க…


“ பூவினத்துப் புயல்களே “

பூவினத்துப் பூவையரே பூந்தளிர் மங்கையரே புதிய சரித்திரம் எழுதிட புதுமைப் பெண்களாகி தாய்நிலத்து வேர் காக்க போர்க்களத்து எல்லையிலே புயலாகி நின்றீரே புரட்சி தனை செய்தீரே ! பூவினத்துப் புயல்களே புன்னை வனக் குயில்களே இருப்புக்களைக் காக்கவே இறைமைகளைப் பேணவே எல்லைகளைக் காத்து நின்றீர் எரிமலையாய் பொங்கி நின்றீர் புரட்சிப் பெண்களாய் புது நானூறும் படைத்து நின்றீர் ! மண்ணுலகின் மங்கையரே மாண்பு மிக்க நங்கையரே கண்ணே கட்டிக் கரும்பேயென்று மருட்டி மாயம்தான் செய்திடுவார் மறந்து தானும் மயங்கிடாதீர் மகத்துவத்தை இழந்திடாதீர் ! பூவை என்றும் பேதை என்றும் பவ்வியமாய் சொல்லியே பலிக்கடா ஆக்கிடுவார் பழியையும் சுமத்திடுவார் குழிக்குள்ளும் தள்ளிடுவார் பூவையே உனைப் பாதுகாக்க புயலாகிப் போராடு உன்னையே ஆயுதமாக்கு ! பூவினத்துப் பூவையே – உன் பொறுமையை சோதித்தால் பெண்மையை சீண்டினால் பொங்கி எழுந்து விடுமேலும் படிக்க…


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !