Sunday, February 10th, 2019

 

இந்தியா அணி போராடி தோற்றது – தொடர் நியூசிலாந்து வசம்!

மூன்றாவதும் இறுதியுமான T-20 போட்டியில் கடின இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 4 ஓட்டங்களால் போராடி தோற்றுள்ளது. அதன்படி 3 போட்டிகள் கொண்ட T-20 தொடரை நியூசிலாந்து அணி 2-1 என கைப்பற்றியுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஹெமில்டனில் ஆரம்பமான இறுதி T-20 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்தியா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளது. அதன் பிரகாரம் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் அதிரடியை வெளிக்காட்ட, அவ்வணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து 212 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பில் கோலின் முன்ரோ 72 ஓட்டங்களையும், டிம் சீஃபெர்ட் 43 ஓட்டங்களையும், கொலின் டி கிராண்ட்ஹோம் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்களை வீழ்த்தினார். இந்நிலையில் கடும் இலக்கை நோக்கி பதிலுக்குமேலும் படிக்க…


யேமனில் சிறுவன் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை – குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்!

யேமனில் உள்ள துறைமுக நகரமான ஏடென் பகுதியில் வசித்துவந்த முஹம்மட் சாத் என்ற 12 வயது சிறுவனை கடந்த ஆண்டு மார்ச் மாதம் கடத்திச் சென்ற சிலர் அவனை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியிருந்தனர். வலியால் கதறிய சிறுவனின் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் அவனது கழுத்தை கத்தியால் அறுத்துக் கொன்ற குற்றச்சாட்டில் இருவரை கைது செய்த பொலிஸார், வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். சிறுவனின் சடலத்தை மறைப்பதற்கு உதவியதாக ஒரு பெண்ணும் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் அவர்கள் மூவருக்கும் அண்மையில் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களை பொது இடத்தில் வைத்து சுட்டுக்கொல்லுமாறு நீதிபதி உத்தரவிட்டார். மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் தற்போது கர்ப்பிணியாக இருப்பதால் அவருக்கான மரண தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மீதமுள்ள இரு குற்றவாளிகளான வதாமேலும் படிக்க…


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சோரம்போகாது: செல்வம் அடைக்கலநாதன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றும் சோரம்போகவில்லை. இந்த அரசாங்கத்தினை உருவாக்கியவர்கள் என்ற அடிப்படையிலேயே வெளியில் இருந்து ஆதரவு வழங்கிவருகின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் பொதுக்கூட்டம் நேற்று (சனிக்கிழமை) மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தேசிய அரசாங்கத்தினை ஏற்படுத்துவது என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு. அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்றைக்கும் பங்காளிகளாக இருக்காது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நினைத்திருந்தால் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றிருக்கமுடியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றும் நிதானமாகவே செயற்பட்டுவருகின்றது. இங்கு வருகை தருகின்ற சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுக்கு நாங்கள் சொல்கின்ற விடயம் எங்களுடைய இனப்பிரச்சினை தொடர்பாக ஐ.நா சபையின்மேலும் படிக்க…


ஒருமித்த நாட்டுக்குள் தீர்வை ஏற்றுக்கொள்ள பிரதான தமிழ்க் கட்சி சம்மதம்: பிரதமர் ரணில்!

சுமார் 70 வருடங்களின் பின்னர் பிரதான தமிழ்க் கட்சி ஒருமித்த நாட்டுக்குள் தீர்வை ஏற்றுக்கொள்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பலபிட்டியவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். புதிய அரசியல் யாப்பிற்கான சட்டமூலம் கூட இதுவரையில் தயாரிக்கப்படவில்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார். ஆனால், புதிய அரசியல் யாப்பினூடாக நாடு பிளவுபட போவதாகவும், பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை இல்லாது போவதாக சிலர் கூறுவதாகவும் பிரதமர் தெரிவித்தார். அரசியல் ரீதியாக வங்குரோத்து அடைந்தவர்களே அவ்வாறான போலியான கருத்துகளை கூறி வருவதாகவும் பிரதமர் கூறியுள்ளார். பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குதல், ஒன்றிணைந்து செயற்படுதல், மற்றும் அதிகாரங்களை பகிர்தளித்தல் ஆகிய விடயங்களில் சகலரும் இணங்கியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். அதேபோல், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைமேலும் படிக்க…


சீனாவில் 23 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – 13 பேர் உயிரிழப்பு!

சீனாவில் பனி படர்ந்த நெடுஞ்சாலையில் பயணித்த வாகனங்கள் சில ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவங்களில் 13 ​பேர் உயிரிழந்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவங்களில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. சந்திர புத்தாண்டு விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு சென்ற லட்சக்கணக்கான மக்கள் தங்களது தொழில் இருப்பிடங்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்தநிலையில், சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள அன்ஹுயி மாகாணத்துக்குட்பட்ட நெடுஞ்சாலை வழியாக வந்த 23 வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றன் மீது ஒன்றாக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இதேபோன்று, குயிஸோவ் மாகாணத்தின் நெடுஞ்சாலை வழியாக சென்ற ஒரு சிறிய ரக பேருந்து, கார் ஒன்றுடன் மோதிய விபத்தில் 8 பேர் பலியாகினர். அவசரமாக தங்களது இருப்பிடங்களுக்கு திரும்பி செல்லும் நோக்கத்தில் பனி உறைந்திருக்கும்மேலும் படிக்க…


ஆந்திர சிறப்பு அந்தஸ்து விவகாரம்: சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்!

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளார். டெல்லியில் உள்ள ஆந்திரா பவன் வளாகத்தில் நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளார். குறித்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டசபை உறுப்பினர்கள், ஆந்திர மாநில அரசு பணியாளர்கள் சங்கங்களை சேர்ந்த தலைவர்கள் மற்றும் அம்மாநிலத்தின் மாணவர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். இந்த உண்னாவிரதப் போராட்டத்தின் பின்னர் நாளை மறுநாள் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஜனாதிபதியை நேரில் சந்தித்து சந்திரபாபு நாயுடு மகஜர் ஒன்pனைக் கையளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேசிய அரசாங்கத்தினை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை: மனோ கணேசன்

தேசிய அரசாங்கத்தினை நான் கொள்கையளவில் எப்போதுமே ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். மாத்தளையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நடமாடும் சேவை நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தேசிய அரசாங்கமென்பது உண்மையில் நல்ல விடயம்தான். ஆனால் இலங்கை போன்றதொரு நாட்டிற்கு இந்த தேசிய அரசாங்க முறைமை பொருத்தமானதா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறுதான் நாம் 2015 ஆம் ஆண்டில் ஜனாதிபதி சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை இணைத்து நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கம் ஒன்றினை உருவாக்கினோம். ஆனால் இன்று அந்த அரசாங்கத்தினது நிலமை தலைகீழாக மாறியிருக்கின்றது. நாங்கள் பொறுப்புடன் உருவாக்கிய அந்த தேசிய அரசாங்கம் இன்று அதாள பாதாளத்தில் விழுந்து இருக்கின்றது. முன்னேற்றமடைந்த நாடுகளில் அதாவது அறிவும் இதயமும் வளர்ச்சியடைந்தமேலும் படிக்க…


கடந்தகாலத் தவறுகளை எண்ணி எதிர்காலத்தினை வீணடிப்பதற்கு விரும்பவில்லை : சி.வி.விக்னேஸ்வரன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வழியினையே பின்பற்றுவதுடன், கடந்தகாலத் தவறுகளை எண்ணி எதிர்காலத்தினை வீணடிப்பதற்கு நான் விரும்பவில்லை என முன்னாள் வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்ட விடயம் சர்சையை ஏற்படுத்தியமை தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “எனது அரசியல் குறிக்கோள் எனக்கு மிகவும் முக்கியனமானதாகும். அந்த வகையில் எம்முடன் கொள்கை ரீதியாக உடன் பயணிப்பவர்களின் கூட்டங்களில் கலந்து கொள்வதைத் தவறாக எடுத்துக் கொள்ள முடியாது. எதிர்காலத்தினைக் குறித்து சிந்தித்து முன்னேற முனைபவனுக்கு கடந்த காலம் சாதாரணமான கடந்த காலமாகவே இருக்கும். கடந்த காலத்துத் தவறுகளால் நிகழ்காலத்தைப் பாதிக்க விட்டோமானால் எதிர்காலம் பாதிப்படையும். அந்தவகையில், தவறுகளே செய்யாதவர்கள் தான் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியினர் என நான் கூறவில்லை.மேலும் படிக்க…


வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 213 (10/02/2019)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 213 ற்கான கேள்விகள்  அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 06, 09 இடமிருந்து வலம் 01 – 04 மகிழ்வான தொல்லைக்குரிய இது சிலரை கோபமடைய செய்யும். 10 – 12 தென்படும் தோற்றம்மேலும் படிக்க…


இசையும் கதையும் – 09 /02/2019

“விருது” பிரதியாக்கம் – திருமதி லாலா ரவி பிரான்ஸ்


நூற்றாண்டைக் கடந்த அருங்காட்சியகம் மீண்டும் திறப்பு!

பிரான்சின் Musee Grevin அருங்காட்சியகம் பெரும் மாற்றங்கள் மற்றும் புதிய வடிவமைப்புடன் மீண்டும் திறக்கப்படவுள்ளது. பாரிசின் Grands Boulevards-யில் அமைந்துள்ள Musee Grevin அருங்காட்சியகம், 1882ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் திகதி உருவாக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் 137 ஆண்டுகளைக் கடந்து மக்களைக் கவர்ந்து வருகிறது. இந்நிலையில், பெரும் திருத்த வேலைகளுக்காக மூடப்பட்ட Musee Grevin அருங்காட்சியம் தற்போது மீண்டும் திறக்கப்படவுள்ளது. மிகவும் பிரபலமான நட்சத்திரங்களின் தத்ரூபமான மெழுகு பொம்மைகளைக் கொண்ட Musee Grevin-யில் மேலும் புதிதாக 30 பிரபலங்களின் பிரதிமைகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் குறித்த அருங்காட்சியகம் நேற்று (சனிக்கிழமை) மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


பிரியங்காவின் அரசியல் பிரவேசம் பா.ஜ.க.-விற்கு நெருக்கடி: கருத்துக்கணிப்பு

பிரியங்காவின் அரசியல் பிரவேசத்தால் காங்கிரஸ் கட்சிக்கு முழுமையான நன்மை கிடைக்குமென 50 சதவீதமானோரும், பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாதென 24 சதவீதமானோரும் கூறியுள்ளனர். இதேவேளை, பிரியங்காவின் வருகையால் பா.ஜ.க.வின் வாக்குவங்கியில் குறிப்பிடதக்களவு சரிவு ஏற்படுமென 52 சதவீதமானோர் தெரிவித்துள்ளனர். பிரியங்காவை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவராக கடந்த மாதம் 23ஆம் திகதி ராகுல்காந்தி அறிவித்திருந்தார். உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள 42 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு பொறுப்பாக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் டெல்லியிலுள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பிரியங்கா தமக்கான பணிகளை ஆரம்பித்துள்ளார். இதற்கமைய  அம்மாநில நிர்வாகிகளை அழைத்து முதல் கட்ட கலந்துரையாடல்களையும் மேற்கொண்டுள்ளார். நாளை மறுதினம் உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக பிரியங்கா உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


புதிய அரசியலமைப்பை விட 13 ஆவது திருத்தச் சட்டத்தை பலப்படுத்துவவே சிறந்தது – டக்ளஸ்

புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதை விட நடைமுறையில் உள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தை பலபடுத்துவதே சிறந்தது என ஈ.பி.டி.பி. தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளதாக ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். வவுனியாவில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் கூறினார். அத்துடன், 13 ஆவது திருத்தச்சட்டத்தை மேற்கொண்டு பலப்படுத்தி அதனூடான பொது இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார். இதன்படி வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் விசேட பிரச்சினை என்பதால் அவர்களுக்கு விசேட அதிகாரங்கள் தேவையென்ற வகையிலும், கிடைக்கப்பெறும் அதிகாரங்கள் மீளப்பெற்றுக்கொள்ள முடியாது என்ற விடயத்தையும் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.


மனிதாபிமான உதவிகள் நிறுத்தம் – 14 சிறுவர்கள் உயிரிழப்பு

மனிதாபிமான உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளமையினால் வெனிசுவேலாவில் இதுவரை 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெனிசுவேலாவிற்கு சர்வதேசத்தின் உதவி தேவையில்லை என தெரிவித்து, அந்நாட்டு ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ எல்லைகளை மூடியுள்ளார். இதனால் அங்குள்ள மக்கள் உணவு , நீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளைப் பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர். பட்டிணியால் பாதிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பார்சிலோனாவிலுள்ள வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நோய் தாக்கங்களுக்குட்பட்டுள்ள மக்களுக்கான மருந்துகளை வழங்குவதிலும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர். இதனிடையே, வெனிசுவேலா மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்கத் தயாராகவுள்ளதாக தொண்டர் படை தெரிவித்துள்ளது. கொலம்பியாவின் குகடா எல்லைப் பகுதியில், உதவிப்பொருட்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், நிக்கலஸ் மதுரோவின் கொள்கையினால் அமெரிக்கா, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து உதவிப் பொருட்களை ஏற்றிச்சென்ற லொரிகள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.மேலும் படிக்க…


கூட்டணி அமைக்க விரும்பவில்லை என சொல்வதற்கு திருமாவளவன் யார்? – தமிழிசை

எங்களுடன் அதிமுக கூட்டணி அமைக்க விரும்பவில்லை என சொல்வதற்கு திருமாவளவன் யார் என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மோடியின் புகழைக் கெடுக்கும் நோக்கத்திலும், ஊழல் இல்லாமல் ஒரு ஆட்சி நிறைவடைந்து அதே ஆட்சி தொடரப் போகிறது என்ற ஆதங்கத்தினாலும், தற்போது காங்கிரஸ் ரஃபேல் ஊழல் விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கிறது. ரஃபேல் விவகாரத்தில் ஊழல் நடைபெறவில்லை என உச்ச நீதிமன்றமே கூறிவிட்டது. பிரான்ஸ் அதிகாரிகள், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரும் தெளிவுபடுத்தியுள்ளார்கள். உண்மை வெளியில் வரும். அது பாஜகவுக்கு சாதகமாக இருக்கும். 20 லட்சம் சாமானிய ஏழைகளின் பணத்தைச் சுருட்டிய கட்சியைச் சேர்ந்தவர் மம்தா பானர்ஜி.மேலும் படிக்க…


தேசியக் கட்சிகளை நாங்கள் எப்படி தமிழகத்திற்கு வரவிடுவோம் – தம்பிதுரை

தேசியக் கட்சிகளை நாங்கள் எப்படி தமிழகத்தில் வரவிடுவோம் என, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்கள் மத்தியில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “தமிழ்நாட்டுக்கு யார் நல்லது செய்கிறார்களோ அவர்களோடு தான் அதிமுக கூட்டணி அமைக்கும் என முதல்வர் கூறியுள்ளார். தமிழ்நாட்டுக்கு யார் நல்லது செய்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். காலப்போக்கில் தான் அது தெரியும். பாஜகவை நான் விமர்சிப்பதாகச் சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் பாஜக தலைவர்கள் என்ன பேசுகிறார்கள்? திராவிடக் கட்சிகளை தமிழ்நாட்டில் வரவிட மாட்டோம் என்கிறார்கள். அதற்கு நான் பதில் சொல்லியாக வேண்டும் அல்லவா? தேசியக் கட்சி என சொல்லிக்கொள்ளும் இவர்களை நாங்கள் எப்படி வரவிடுவோம்?” என குறிப்பிட்டுள்ளார்.


எனது தலைமையில் ஆட்சி அமைந்தால் இந்தியாவுடனான உறவு புதுப்பிக்கப்படும் – மஹிந்த

தனது தலைமையில் அரசாங்கம் ஒன்று மீண்டும் உருவாகினால் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவை புதுபிக்க நடவடிக்கை எடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு கடந்த 1980 ஆம் ஆண்டும் 2014 ஆம் ஆண்டும் பாரிய அளவில் பிளவு பட்டதாகவும் அவர் கூறினார். இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள மஹிந்த ராஜபக்ஷ தி ஹிந்து பத்திரிகையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் பங்கேற்று உரையாற்றினார்.  இதன் போதே அவர் மேற்படி விடயத்தை கூறியுள்ளார். மேலும் இலங்கையில் நிலவிய போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இந்தியா அளபரிய சேவையாற்றியதாக தெரிவித்த அவர், தற்போது இரு நாட்டு அரசாங்கங்களுக்கும் இடையில் குறைந்தளவான தொடர்பாடல் காணப்படுவதாக தெரிவித்தார். எனவே 80 ஆம் மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட உறவு முறிவை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் எனவும்மேலும் படிக்க…


13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு – கிழக்கு ஆளுநர்

13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, காத்தான்குடி மத்திய கல்லூரியின் 89 ஆவது வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) மாலை பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில், “கிழக்கு மாகாணத்தை கல்வியிலும் சுகாதாரத் துறையிலும் அவற்றை முன்னேற்றுவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு எனக்கு பணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நான் பல தீர்மானங்களை எடுத்துள்ளேன். அந்தவகையில், ஒவ்வொரு பாடசாலை அதிபர்களுக்கும் அதிகாரங்களை வழங்கி, பிரதேச கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரங்களை வழங்கி ஒவ்வொரு பிரதேசத்தினுடைய கல்வித் திட்டங்களை அவர்ளுக்கு நாம் ஒப்படைக்கவுள்ளோம். இவ்வாறு கிழக்கு மாகாணத்தினுடைய ஒவ்வொரு பிரச்சினையையும் அடையாளங்கண்டு அந்தப்மேலும் படிக்க…


ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாணசபைத் தேர்தல் – ஜனாதிபதி

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில், “நாட்டில் இன்று ஜனாதிபதித் தேர்தலை நடத்துமாறு சிலர் கோருகின்றனர். அவ்வாறான தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், எனது பதவிக்காலம் முடிவடைந்தவுடன் அந்த தேர்தல் நடத்தப்படும். அதனை எவராலும் தடுக்க முடியாது. அதேபோல் எவரும் பலவந்தமாக தேர்தலை நடத்த முடியாது. எனக்கு மாத்திரமே அதற்கான உரிமை உள்ளது. எனினும் அதற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் உள்ள குளறுபடிகளை நிவர்த்திசெய்து இத்தேர்தலை உறுதியாக நடத்தவேண்டும். எனது 4 வருட ஆட்சியில் ஊழலை ஒழிக்க முடிந்துள்ளது. சுதந்திரமாக வாழ்வதற்கு வழியேற்பட்டது. ஆனால் அந்த சுதந்தரத்தை சீர்குலைக்கும் சக்தியாக போதைப்பொருள் வியாபாரம்மேலும் படிக்க…


“ குறள் அமுதம் “

ஐயன் வள்ளுவன் ஆக்கிய அமுதம் ஐயம் தவிர்த்த தமிழ் வேதம் ஐந்தாம் வேதமாய் அரசாளுது ஐரோப்பிய மொழிகளிலும் தவளுது உலகப் பொதுமறையாகி உலா வருகுது அகில உலகிலும் அமுதமாய் மிளிருது ! அன்புநெறி புகட்டும் அரியதோர் பொக்கிஷம் அஞ்ஞானம் விளக்கும் ஞானக் களஞ்சியம் ஈரடியால் உலகை அளந்த குறளமுதம் செம்மொழித் தொகுப்புக்களின் சாரம் பொதுமை கூறும் கலைக்காவியம் ஐயன் வள்ளுவன் ஆக்கிய குறளமுதம் ! குறள் வெண்பாவால் ஆகிய காவியம் அற, ஆசாரங்களைப் புகட்டும் ஓவியம் அறிஞர்களை உரை எழுதத்தூண்டிய அதிசயம் நெறியோடு வாழ வழிகாட்டும் தத்துவம் இன,மத,மொழி, கடந்த இலக்கியம் இல்வாழ்விற்கு வழி காட்டும் வழிகாட்டி ! முற்பகுதி முற்றிலுமே தத்துவம் பேசும் இரண்டாம் பகுதி அரசியலை இடித்துரைக்கும் இறுதிப்பகுதி கற்பனைச் சிறகுவிரித்து காதல் மொழி பேசும் காவியமாய் மிளிரும் ! மொத்தத்தில் வாழ்வியலை வண்ணமாக்கிமேலும் படிக்க…


ஸ்பெயின் ரயில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு- 100 பேர் படுகாயம்!

ஸ்பெயினில் பார்சினோலாவின் வடமேற்கு பகுதியில் இரு ரயில்கள் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், சுமார் 100 பேர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) மாலை இவ்விபத்து சம்பவித்ததாக கடலோனியா பிராந்திய அவசர சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது. விபத்தில் 26 வயதான ரயிலின் எஞ்சின் சாரதியே உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஸ்பெயின் பிரதமர் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இரங்கல் வெளியிட்டுள்ளார். அத்துடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார். இதேவேளை, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற ரயில் விபத்தில் 50 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !