197 சிறைக்கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் நாளை விடுதலை!
நாடளாவிய ரீதியில் உள்ள சிறைகளில் இருந்து 197 சிறைக்கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் இன்று (வியாழக்கிழமை) இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, மஹர, கேகாலை, வெலிக்கடை, களுத்துறை, போகம்பரை, மட்டக்களப்பு, வாரியபொல ஆகிய சிறைச்சாலைகளைச் சேர்ந்த முறையே 20, 18, 17, 13, 11, 11, 11, 10 கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர்.
74ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.