16 வயது இளைஞன் செலுத்திய கார் பல வாகனங்களுடன் மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு
கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் வெலிசர பொது மயானத்துக்கு அருகில் இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து காயடைந்தவர்கள் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலிருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு காரொன்று வீதியை விட்டு விலகி, எதிர் திசையில் பயணித்த இரு மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி மற்றும் காரொன்றின் மீதும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பதினாறு வயது இளைஞன் செலுத்திய காரொன்றே இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மஹபாகே பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.