16வது ஆண்டு நினைவு நாள் – அமரர்.திருமதி இராசலட்சுமி செல்லத்துரை (10/12/2024)

தாயகத்தில் அரியாலையை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் மித்திரி மொறியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் திருமதி செல்லத்துரை இராஜலட்சுமி (முத்தக்கா)அவர்களின் 16ம் ஆண்டு நினைவு தினம் 10ம் திகதி மார்கழி மாதம் செவ்வாய்க்கிழமை அவர்களின் இல்லத்தில் நினைவு கூருகின்றனர்.
அமரர் திருமதி செல்லத்துரை இராஜலட்சுமி அம்மாவை அன்பு கணவர் செல்லத்துரை, அன்பு பிள்ளைகள் பிரான்சில் வசிக்கும் கேதீஸ்வரன் குடும்பம்,ஜோதீஸ்வரன் புஷ்பா குடும்பம், மகேஸ்வரன் குடும்பம், சிவமதி தர்மபாலா குடும்பம், லண்டனில் வசிக்கும் கலைமதி பாலராஜன் குடும்பம், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் அன்பு தாயாரை நினைவு கூருகின்றார்கள்.
இன்று 16வது ஆண்டை நினைவு கூரும் அமரர் திருமதி செல்லத்துரை இராஜலட்சுமி அம்மாவை TRT குடும்பமும் நினைவு கூருகின்றோம்.
இன்று TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு மகன் அன்பு மருமகள் ஜோதி-புஷ்பா குடும்பத்தினர்
அவர்களுக்கு எமது இதயபூர்வமான நன்றி.
பகிரவும்...