Main Menu

1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம்

இந்த ஆண்டில் இதுவரை சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக இலங்கை சுற்றுலா துறை தரவுகள் தெரிவிக்கின்றன. 

ஜூன் மாதம் வரை, 1,008,449 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகவும் இதில் 97,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சீனாவில் இருந்து வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

ஏனையவர்கள் இந்தியா, அவுஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் மாலைத்தீவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் காரணமாக கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது சுற்றுலாப் பயணிகளின் வருகை 57 சதவீதம் குறைவடைந்துள்ளதாகவும் அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன. 

இலங்கைக்கு விஜயம் செய்யும் சீன பயணிகளின் தடை நீக்கப்பட்ட நிலையில், இலங்கைக்கு அதிகமான சீன சுற்றுலாப் பயணிகள் வருகைதருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில், கடந்த மாதம், சுற்றுலாதுறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தலைமையிலான உத்தியோகபூர்வ தூதுக்குழு சீனாவுக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...