Main Menu

ஸ்பெயினில் கொவிட்-19 பாதிப்பு அதிகரிப்பு: மூன்று இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

ஐரோப்பாவில் மிக முக்கிய நாடான ஸ்பெயினில், மீண்டும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதன்படி கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் இரண்டாயிரத்து 953பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை சந்தித்த ஓன்பதாவது நாடாக விளங்கும் ஸ்பெயினில், இதுவரை மூன்று இலட்சத்து 52ஆயிரத்து 847பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 28ஆயிரத்து 499பேர் உயிரிழந்துள்ளனர்.

ஸ்பெயினில் கொவிட்-19 தொற்றின் இரண்டாம் அலை தொடங்கியுள்ளதாக உலகநாடுகள் அஞ்சியுள்ள நிலையில், பிரித்தானியா, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகள் அதிக ஆபத்து பட்டியலில், ஸ்பெயினை சேர்த்துள்ளது.

ஆனால், பெரும்பாலான பிராந்தியங்களில் நோய்த்தொற்றுகள் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஸ்பெயினில் ஏறக்குறைய 47 மில்லியன் மக்கள், கடந்த மார்ச் 14ஆம் திகதி முதல் உலகின் மிகக் கடுமையான வைரஸ் கட்டுப்பாட்டுக்கு கீழ் வாழ்ந்து வந்தனர்.

தற்போது அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள நிலையில், மீண்டும் கொவிட்-19 தொற்று பரவல் எழுச்சிப் பெற்றுள்ளதால், ஸ்பெயின் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பகிரவும்...