Main Menu

வெள்ளிக் கிரகம் குறித்த ஆய்வு : இந்தியாவுடன் கைக்கோர்க்கும் சுவீடன்!

இந்தியா மேற்கொள்ளும் வெள்ளிக் கிரகம் குறித்த ஆய்வு திட்டமான “சுக்ரயான்” செயற்கைக் கோள் திட்டத்தில்  ஐரோப்பிய நாடான சுவீடன் இணைந்துள்ளது.

இது குறித்து இந்தியாவுக்கான சுவீடன் துாதர் கிளாஸ் மோலின் தெரிவிக்கையில் “இஸ்ரோவின் வெள்ளிக் கிரக ஆய்விற்கான  சுக்ரயான் திட்டத்தில்  சுவீடன் விண்வெளி இயற்பியல் மையம் பங்கு கொள்கிறது.

சுக்ரயான் செயற்கைக் கோளில் சுவீடனின் ‘வி.என்.ஏ.’ என்ற கருவி பொருத்தப்படும். இது  சூரியனில் இருந்து வெளிப்படும்  அணுப் பொருட்களால்  வெள்ளியின் வளி மற்றும் புற மண்டலங்களில் ஏற்படும் தாக்கத்தை ஆய்வு செய்வதற்கு உதவும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’ முதன் முறையாக  வெள்ளி கிரக ஆராய்ச்சிக்கு ‘சுக்ரயான்’ செயற்கைக் கோளை அனுப்பவுள்ளது.  வெள்ளி கிரகம் 19 மாதங்களுக்கு ஒரு முறை  பூமிக்கு நெருக்கமாக வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையில்  2023 ஜுன் மாதத்தில்   சுக்ரயான் செயற்கைக் கோள் விண்ணில்  செலுத்தப்படவுள்ளது. இது வெள்ளியின் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டு, அந்த கிரகத்தின் மேற்பரப்பு  நிலப்பரப்பு தொடர்பான ஆய்வினை மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...