Main Menu

விவசாயிகளின் போராட்டம் ஆரம்பித்து 4 மாதங்கள் நிறைவு – நாடளாவிய போராட்டத்திற்கு அழைப்பு

வேளாண் சட்டங்களை எதிர்த்து எதிர்வரும் 26ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் முழுஅடைப்பு போராட்டத்திற்கு விவசாயிகள் கூட்டமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பினர், போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 4 மாதங்கள் நிறைவடையும் நிலையில், இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சிறு, குறு வியாபாரிகள், வணிக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு முழு ஆதரவை தர வேண்டுமெனவும் விவசாயிகள் சங்கத்தினர் கேட்டுக்கொண்டனர்.


மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி  விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். விளைபொருள்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையை தொடர்ந்து வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக பல கட்டப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் இதுவரையில் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...