Main Menu

பிரான்ஸின் பல்வேறு நகரங்களில் பல கட்டங்களாக கொவிட் கட்டுப்பாடுகள்!

பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுப் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு நகரங்களில் பல கட்டங்களாக கொவிட் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தபடவுள்ளது.

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை பரவி வருவதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்று குறித்த அதிகாரிகள் அளவிலான ஆய்வுக்கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படுவதாக புகார்கள் வந்துக்கொண்டிருக்கும் நிலையில், மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் கிட்டத்தட்ட நிறைவுகட்டத்தை நெருங்கியுள்ளதாகவும் அதன் தரவுகள் நம்பகத்தன்மையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அரசாங்க பேச்சாளர் கேப்ரியல் அட்டல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘தடுப்பூசிகள் போடப்படுவது மீண்டும் ஆரம்பிக்கப்படும். இன்று (வியாழக்கிழமை) ஐரோப்பிய மருத்துவ ஸ்தாபனம் வெளியிட உள்ள அறிக்கை முடிவுகளை அடுத்து, மீண்டும் தடுப்பூசிகள் போடப்படும். குறித்த தடுப்பூசியினால் பக்க விளைவுகள் மிக அரிதான ஒன்றாகும்’ என கூறினார்.

கடந்த 7 நாட்களில் 10,207பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2.277 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது மொத்தமாக 4,239பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறுதியாக 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அதிகபட்சமாக இந்த எண்ணிக்கை பதிவாகியிருந்தது. தற்போது மீண்டும் அதே எண்ணிக்கை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...