Main Menu

விளாடிமிர் புட்டினிடம் மக்ரோன் முன்வைத்த மூன்று கோரிக்கைகள்

நேற்று திங்கட்கிழமை இம்மானுவல் மக்ரோன் இரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசியில் உரையாடியிருந்தார்.

அதன்போது, உக்ரைன் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை ஜனாதிபதி மக்ரோன் முன்வைத்திருந்தார். ஒன்றரை மணிநேரம் நீடித்த இந்த உரையாடலின் முடிவில், விளாடிமிர் புட்டின் மக்ரோனின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், “பொதுமக்கள் மீதும், பொதுமக்கள் வசிக்கும் இடங்களிலும் தாக்குதல் நடத்த கூடாது!” எனவும், பொதுமக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்” எனவும் இறுதியாக முக்கிய நெடுஞ்சாலைகள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது எனவும் குறிப்பாக உக்ரைன் தலைநகர் Kiev இல் இருந்து தெற்கு நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் தாக்குதல் நடத்தக்கூடாது எனவும் மக்ரோன் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த கோரிக்கைகளை விளாடிமிர் புட்டின் ஏற்றுக்கொண்டதாக எலிசே மாளிகை தெரிவித்துள்ளது.

அதேவேளை, சர்வதேச மனித உரிமைகள் சட்டத்துக்கு அமைவாக செயற்பட வேண்டும் எனவும் மக்ரோன் இரஷ்ய ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

பகிரவும்...