Main Menu

வவுனியா வர்த்தகர்களுக்கு நகரசபை முக்கிய அறிவுறுத்தல்!

வவுனியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகளை நான்கு பைகளில் தரம்பிரித்து வழங்குமாறு வர்த்தக நிலையங்களுக்கு அறிவுறுத்தல்கள் நகரசபையினால் இன்று (வியாழக்கிழமை) வழங்கப்பட்டுள்ளது .

வவுனியா நகரில் கழிவகற்றல் நடவடிக்கையை மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல் நிலைமைகள் தோண்றுகின்றது . இதனால் நகரசபை ஊழியர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் தரம்பிரிப்பதில் தாமதங்கள் எற்படுவதால் வர்த்தக நிலையங்களில் திண்மக்கழிவுகளை வழங்கும்போது பச்சை நிறத்திலான பைகளில் உணவுக்கழிவுகளையும், சிவப்பு நிறப் பைகளில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளையும் மஞ்சள் நிற பைகளில் கடதாசிக்கழிவுகளையும் நீல நிறப் பைகளில் கண்ணாடி மற்றும் உலோகக்கழிவுகளையும் குப்பை அகற்ற வரும் ஊழியர்களிடம் வழங்கி வைக்குமாறு வர்த்தக நிலையங்களுக்கு சென்ற நகரசபை ஊழியர்கள் அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர் .

பத்து ரூபா முதல் நாற்பது ரூபாவரையில் செலுத்தி உங்களுக்கு தேவையான கழிவுப்பைகளை நகரசபை கழிவு சேகரிக்கும் பிரிவில் பெற்றுக்கொள்ளுமாறும் நகரசபையின் மேற்படி திண்மக்கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு வர்த்தகர்கள் தங்களின் பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் மேற்படி நடைமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக எதுவிதமான முன்னறிவித்தல்களும் இன்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் மேலதிக தகவல்களுக்கு நகரசபையின் சுகாதாரப்பிரிவு அலுவலக தொலைபேசி 021 2222488 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

பகிரவும்...